டீன் 14 - சித்தாரா - சிறுத்தை என் ஃப்ரெண்டுதான்!

காடோடிஇரா.கலைச்செல்வன்

“நாம் வாழும் பூமி மூதாதையர் களின் சொத்து அல்ல; அது எதிர்கால தலைமுறைக்கானது...  நான் காட்டுக்குப் போகும் போதெல்லாம் என் அம்மா சொல்லிக்கொடுத்த இந்த வாசகத்தைத்தான் நினைவுபடுத்திக் கொள்வேன். காடுகளில் பிளாஸ்டிக், குப்பைகளைப் பார்க்கும்போது ரொம்ப கஷ்டமாக இருக்கும். அதனால் எத்தனை மிருகங்கள் பாதிக்கப்படும்?  என்னால் முடிந்தவரை குப்பைகளை அப்புறப்படுத்திவிட்டுத்தான் வருவேன்...’’ என்று தெளிவான சிந்தனையுடன் ஆரம்பிக்கும் சுட்டி வைல்ட்லைஃப் போட்டோகிராஃபர், பொள்ளாச்சி அருகே சேத்துமடையில் வசிக்கிறார். 2014-ல் பி.பி.சி.

நடத்திய சர்வதேச புகைப்படப் போட்டியில் வெற்றிபெற்று, லண்டன் சென்று விருது பெற்றுள்ளார். கோவை, `டிஜே அகாடமி’ நடத்திய தேசியப் போட்டியிலும் பரிசு பெற்றிருக்கிறது இவரது க்ளிக். இப்படி விருதுகளைக் குவித்த அந்தப் புகைப்படத்தின் கதைதான் என்ன?

“கோவை பேரூர் அருகே  ஒரு தோட்டத்தில் ஆந்தைகள் கூட்டம் முகாம் இட்டிருப்பதாகக் கேள்விப்பட்டு, அங்கு போனோம். ஆந்தைகளின் ஸ்பெஷலே அதன் கண்கள்தான். அது கேமராவைப் பார்ப்பது போல எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அதுவும் ஐந்து ஆந்தைகளும் ஒரே நேரத்தில் கேமராவைப் பார்த்தால் எப்படி இருக்கும் என்று யோசித்தேன். நான்கு மணி நேரம் காத்திருந்து 2 ஆயிரத்துக்கும் அதிக போட்டோக்கள் எடுத்த பிறகு நான் நினைத்த அந்த போட்டோவை என்னால் எடுக்க முடிந்தது’’ என்று வியப்பூட்டுகிறார் இந்த சுட்டி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்