பிள்ளை முகம் பார்க்க முடியாத வாடகைத் தாய்கள்! - இந்நிலை மாறுமா இனி?

சட்டம்கே.அபிநயா - ஓவியம்: பிரேம் டாவின்ஸி

ந்தியாவில்தான் வாடகைத் தாய்கள் மிக அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். கிராமப் புறங்கள் மற்றும் பழங்குடியினப் பகுதிகளில் உள்ள பெண்களிடம் வாடகைத் தாய் என்ற போர்வையில் வெளிநாட்டவர் நடத்தி வந்த முறைகேடுகள் ஏராளம். இதுவரை தெளிவான சட்டம் இல்லாத நிலையில், சமீபத்தில்தான் ‘வாடகைத் தாய் சட்ட வரைவு மசோதா 2016’ மூலமாக மத்திய அமைச்சரவை இச்செயல்களுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் வாடகைத் தாய்களின் வாழ்க்கையும் சூழலும் எப்படி இருக்கிறது என ஆராய்ந்தோம்.

வாடகைத் தாய் எனும் அவலம்!

வாடகைத் தாய்களுக்கு எந்த அங்கீகாரமும் இங்கு  அளிக்கப்படுவது இல்லை. 10% வாடகைத்தாய்களுக்கு மட்டும்தான், யாருக் காக பிள்ளை பெற்றுக் கொடுக்கிறோம் என்பது போன்ற விவரங்கள் தெரிய வருகிறது. வாடகைத்தாய்க்கு ஏற்படும் உடல்நலக் கோளாறுகளை யாரும் கண்டுகொள்வதில்லை.

ஒரு குழந்தை பிறக்கும்போதே சத்துக்குறைபாடு காரணமாக பெண்ணின் உடல் பல பிரச்னைகளைச் சந்திக்கிறது. வாடகைத் தாயாக, ஒரு பெண்ணே பல குழந்தைகள் பெற்று எடுக்கும்போது என்னவாகும்? ரத்தசோகை, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பிரச்னைகள் ஏற்படும் அபாயம் மிக அதிகம்.

வாடகைத் தாய் பெண்களை நார்மல் டெலிவரிக்கு அனுமதிப்பது இல்லை. காரணம், உரியவர்களின் குழந்தை எந்தச் சிரமமும் இல்லாமல் வெளிவர வேண்டும் என கண்டிஷன் போடுவார்களாம். அது மட்டுமல்ல... வாடகைத்தாய் வயிற்றில் கரு வளரும்போதே பெற்றோர் பிரிந்துவிட்டாலோ, குழந்தையை யாரிடம் கொடுப்பது என்பதில் சிக்கல் வரும். வாடகைத் தாய்க்கு கருச்சிதைவு ஏற்பட்டாலோ, அவர்களை அதோடு விட்டுவிடுவார்கள்.

வட மாநிலங்களில் படிப்பு அறிவு இல்லாத, வறுமையில் வாடும் பெண்களையே வாடகைத் தாய் பணிக்குக் குறிவைக்கிறார்கள். சில ஆயிரம் ரூபாய் மட்டும் கொடுத்து ஏமாற்றுகிறார்கள். பெற்ற குழந்தையைப் பார்க்கக்கூட அனுமதிப்பதில்லை.  இங்கு எல்லாமே குறைந்த செலவில் நடப்பதால்தான், மற்ற நாடுகள் குறிவைத்து வருகிறார்கள். குறிப்பாக, ஆஸ்திரேலியாவில் இருந்து மருத்துவ சுற்றுலா என்ற பெயரில் இங்கு வந்து குழந்தை வாங்கிச் செல்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்