தொலைந்துபோகும் குழந்தைகள்... திரும்ப கிடைக்கும் கேள்விகள்!

தேவை அதிக கவனம்கே.ஆர்.ராஜமாணிக்கம், ஸ்ரீலோபாமுத்ரா

13 வயது நிரம்பிய பூஜிதா என்ற பெங்களூரு மாணவி தொலைந்துபோனதும், அதைத் தொடர்ந்து  பறந்த வாட்ஸ்அப், ஃபேஸ்புக், டிவிட்டர் செய்திகளால் மீண்டும் அவள் கண்டுபிடிக்கப்பட்டதும் சமீபத்திய வைரல் செய்தி.

என்ன நடந்தது பூஜிதாவுக்கு?

வழக்கம்போல பள்ளிக்குச் சென்ற பூஜிதா, மாலை வீடு திரும்பவில்லை. பெற்றோர் பதறிப்போனார்கள். உடனே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டதோடு, வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் அவளது புகைப்படத்துடன் செய்திகள் தேசம் முழுக்கப் பகிரப்பட்டன.

கடத்தலா, தனிப்பட்ட பிரச்னையா, அவளே வீட்டைவிட்டுச் சென்றுவிட்டாளா? என்ன ஆனது பூஜிதாவுக்கு? அனைவரும் பதறிக்கொண்டிருந்த சூழலில், நான்கு நாட்கள் கழித்து ஹூப்ளி ரயில் நிலையத்தில் அவளைக் கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்தது போலீஸ்.

பள்ளிக்கூடம் சென்ற பூஜிதா வீடு திரும்பாமல், அஜ்மீர் எக்ஸ்பிரஸில் ஏறியது ஏன்?

`‘கணக்குப் பாடத்தில் குறைவான மதிப்பெண் பெற்றிருந்தாள். அதனால் மனம் சோர்ந்துபோயிருந்தாள். ‘நன்றாகப் படித்தால், அடுத்த தேர்வில் அதிக மதிப்பெண் பெறமுடியும்’ என்று ஆறுதல் கூறினோம். ஆனால், இப்படிச் செய்வாள் என நினைக்கவில்லை’’ என்றனர் அவளது பெற்றோர்.

பெற்றோர் ஆறுதல் கூறிய பின், ஏன் வீட்டைவிட்டுப் போக வேண்டும்? குழந்தையிடம் அதற்கான பதில் இல்லை.

இப்போது, நமக்கு பதில் தேவையில்லை, தீர்வுதான் தேவை.  

``பள்ளிக்கூடத்தில் நம் பிள்ளைகளை ‘listen, dont talk’ என்கிறார்கள். தாத்தா, பாட்டிகள் அற்ற வீட்டில் டி.விதான் அவர்களுக்குத் துணை. விளையாட்டு அவர்களிடமிருந்து பிடுங்கப்பட்டுவிட்டது. பெண் குழந்தைகள் அனுபவிக்கும் பாலியல் ரீதியான பிரச்னைகள் அதைவிடக் கொடுமை. யாரிடமும் மனம்விட்டுப் பேச முடியாத சூழலில், அவர்கள் தங்கள் பிரச்னையை எப்படித்தான் சமாளிப்பார்கள்?’’ என்று கேட்கிறார் கல்வியாளர் ஆயிஷா நடராசன்.

‘`மதிப்பெண்களைத் துரத்தும் இன்றைய கல்வி முறையில், குழந்தைகளின் மனநிலையைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. அமைச்சர் சொல்வதை செகரட்டரியும், செகரட்டரி சொல்வதை இயக்குநரும், இயக்குநர் சொல்வதை மாவட்டக் கல்வி அதிகாரியும், அதிகாரி சொல்வதை தலைமை ஆசிரியரும், தலைமை ஆசிரியர் சொல்வதை ஆசிரியரும், ஆசிரியர் சொல்வதை மாணவர்களும் கேட்க வேண்டும். இதுதான் இங்கு நடைமுறை. ஆனால், இந்தக் கல்வி உண்மையான கல்வியாக இருக்க வேண்டும் என்றால், இந்த வரிசை மாணவர்களிடமிருந்து மேல்நோக்கியதாக இருக்கவேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்