நமக்குள்ளே!

பிரேசிலில் நடந்து முடிந்திருக்கும் ஒலிம்பிக் - 2016 விளையாட்டுப் போட்டிகளின் பதக்கப்பட்டியலில் இந்தியாவின் பெயர் ஒரு வழியாக சேர்ந்துவிட்டது.

ஆனாலும் ஒருபுறம் ஒலிம்பிக்ஸில் கலந்துகொண்ட இந்திய வீரர், வீராங்கனைகளை நோக்கி கிண்டல், கேலிகள் சிறகெடுத்து விரிந்தவண்ணம் இருக்கின்றன. மற்றொருபுறம் ‘முதல்ல உங்க குழந்தைங்க படிக்கிற ஸ்கூல்ல பிளேகிரவுண்ட் இருக்கா?' என்கிற எதிர் கமென்ட்டுகளுக்கும் பஞ்சமில்லை.

உண்மைதானே... `உங்கள் குழந்தை படிக்கும் பள்ளியில் விளையாட்டு மைதானம் இருக்கிறதா?' என்கிற கேள்விக்கு நம்மில் பெரும்பாலானோரின் பதில் நிச்சயம் மௌனமாகத்தானே இருக்கும்!

பாதிக்கும் மேற்பட்ட பள்ளிகளில் கைக்குட்டை அளவிலான விளையாட்டு மைதானங்கள்கூட இல்லை என்பதுதானே நிதர்சனம். அப்படியே மைதானங்கள் இருந்துவிட்டாலும், அவற்றில் விளையாடக்கூட நேரமில்லாமல் படிப்பின் பின்னால் மட்டுமே குழந்தைகளை ஓடவைப்பதுதானே பெரும்பாலான பள்ளிகள் மற்றும் பெரும்பாலான பெற்றோரின் குறிக்கோளாக இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம்... பணம் என்பதை நோக்கிய ஓட்டம்தானே!

ஆரம்பத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கினாலும், என்று நம்முடைய வெற்றி உலகறியப்படுகிறதோ அன்று நமக்கான பேரும், புகழும், சம்பாத்தியமும் வந்து சேரும் என்பதை உசேன் போல்ட்களும், சச்சின்களும் நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்கள். இதோ, இந்தியாவுக்கான இரண்டு பதக்கங்களை வென்று புதிய நம்பிக்கைக்கு அடிபோட்டிருக்கிறார்கள் சாக் ஷி மாலிக்கும், சிந்துவும்!

இனியாவது விளையாட்டில் ஆர்வம் இருக்கும் குழந்தைகளுக்கு அதற்கான வழிகளையும் கதவுகளையும் திறந்துவிடுவோம்.

உரிமையுடன்,

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்