`அவள் 20-20’... திருச்சியில் ஒரு சந்தோஷத் திருவிழா!

ஃபன் டே

லைக்கோட்டை மாநகரம் திருச்சி சமீபத்தில் கண்ட சந்தோஷத் திருவிழா... திருச்சியில் ஆகஸ்ட் 7-ம் தேதி வாசகர் கொண்டாட்ட திருவிழாவான அவள் விகடன் ’20-20’ நிகழ்ச்சி நடந்தது. அவள் விகடன், சத்யா ஏஜென்சி நிறுவனத்துடன் ‘எல்டியா’ ப்யூர் கோகனட் ஆயில்,
ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ் மற்றும் சுப்ரீம் பர்னிச்சர் இணைந்து நடத்திய இந்த விழா டைட்டிலுக்கு ஏற்ப `ஒன் டே ஃபன் டே' ஆக முடிந்தது!

காரைக்குடி, நாமக்கல், நெல்லை, தஞ்சை, திருச்சி, சேலம் என தமிழகத்தின் பல ஊர்களில் இருந்தும் வாசகிகள் ஆர்வத்துடன் வருகை தந்திருக்க, நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் ‘சுட்டி’ அரவிந்த் மற்றும் சித்ரா, அந்நாளை குதூகலத்துடன் துவக்கிவைத்தனர். ஆஃப் ஸ்டேஜ் போட்டிகளான ரங்கோலி, மெஹந்தி மற்றும் ஆர்ட் அண்ட் கிராஃப்ட்டில், கொடுக்கப்பட்ட 20 நிமிடங்களில் தங்களின் ‘கைவரிசை’யைக் காட்டி அசத்தினார்கள் பெண்கள். அடுத்ததாக, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ பட்டத்துக்கான ‘ஆன் த ஸ்பாட்’ போட்டிகள் வரிசை கட்டின. ஆடல், பாடல், நடிப்பு, மிமிக்ரி, பலூன் விளையாட்டு, ஸ்ட்ரா கேம், கேட் வாக் என இளம்பெண்கள் முதல் வயதானவர்கள் வரை தங்களின் பலதரப்பட்ட திறமைகளையும் மேடையில் வெளிப்படுத்தி அரங்கை கலகலக்க வைத்தனர். 

விழாவின் திடீர் சர்ப்ரைஸாக நீளமான கூந்தல் உடையவர், இவ்விழாவுக்கு முதலாவதாக வந்தவர், நேர்த்தியான உடை அணிந்தவர்கள் என அனைவரையும் மேடையேற்றி உடனடியாக அசத்தல் பரிசுகள் வழங்கப்பட்டன.

மாலையில் போட்டிகள் முடிவுக்கு வர, ‘சத்யா’ வீட்டு உபயோகப்பொருட்கள் மற்றும் ‘எல்டியா’ ப்யூர் கோகனட்  ஆயில் நிறுவனத்தினரின் விளம்பரங்களை ஒளிபரப்பி, அதிலிருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதிலளித்த நம் வாசகிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆன் ஸ்டேஜ், ஆஃப் ஸ்டேஜ் போட்டிகளுக்கான வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட, மேடைக்கு வந்து பரிசுகளைப் பெற்றுச் சென்றனர். நிகழ்ச்சியின் ஹைலைட்டான ‘லேடி சூப்பர் ஸ்டார்’ பட்டத்தை வென்றவர்கள், குழு நடனத்தில் அசத்திய கல்லூரிப் பெண்கள் அக் ஷயா, ஐஸ்வர்யா மற்றும் நான்ஸி. இவர்களில் அக் ஷயாவும் ஐஸ்வர்யாவும் சகோதரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பம்பர் பரிசுக்கான நேரம். குலுக்கல் முறையில் எடுக்கப்பட்ட சீட்டில் எழுதியிருந்த பெயர், சமீமா பானு. நம் விழாவை தன் சிலம்பாட்டத்தால் ‘கெஸ்ட் பெர்ஃபார்மன்ஸ்’ கொடுத்து தொடங்கி வைத்தவருக்கு, அடித்தது ஜாக்பாட். அளவில்லாத ஆனந்தத்துடன் வந்து ப்ரிட்ஜை பெற்றுக்கொண்டார். விழாவுக்கு வந்த அனைத்து வாசகிகளுக்கும் பல பரிசுகளும், `தடம்’ புத்தகம் கொண்ட கிஃப்ட் பேக்கும் வழங்கப்பட, ‘அவள் 20 - 20... அடுத்து எங்கே? எப்போ?’ என்று பிரிய மனமில்லாமல் கேட்டுச் சென்றார்கள்!

விரைவில்..!

- ஹ.ச.ஷஃபியுல்லா, ஜெ.நிவேதா, மு.ரஞ்சித் குமார்
 படங்கள்:  மு.சாருமதி, ர.மனோஜ் குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick