நோய் நாடி..! - BP  - அறிந்ததும் அறியாததும்!

கம்ப்ளீட் மெடிக்கல் கைடு!

ன்று பெரும்பாலானவர்கள் அவதியுறும் ஆரோக்கியப் பிரச்னையான ரத்த அழுத்தம் பற்றிய மருத்துவத் தகவல்களை விரிவாகப் பேசுகிறார், சென்னையைச் சேர்ந்த ரத்த அழுத்த மற்றும் சர்க்கரை நோய் சிறப்பு நிபுணர் டாக்டர் செந்தில் மணிகண்டன்.

ரத்த அழுத்தம் என்பது என்ன?

இதயத்திலிருந்து ரத்தக் குழாய்கள் வழியாக உடல் உறுப்புகளுக்கு ரத்தம் அனுப்பப்படும். இந்த ரத்த ஓட்டம் இதயத்துக்கு வரும்போது ஒரு குறிப்பிட்ட வேகத்திலும், இதயத்திலிருந்து வெளியேறும் போது வேறு ஒரு வேகத்திலும் செல்லும். இப்படிச் செல்லக்கூடிய இந்த வேகத்துக்குப் பெயர்தான், ரத்த அழுத்தம் (Blood pressure).

பொதுவாக, ரத்த அழுத்தத்தை 120/80 mm Hg என்ற அளவில் குறிப்பிடும்போது, இதில், 120 என்பது சிஸ்டாலிக் அழுத்தத்தை (Systolic pressure) குறிக்கும். இது, இதயம் சுருங்கி ரத்தத்தை வெளியில் தள்ளும்போது ஏற்படுகிற அழுத்தம். 80 என்பது டயஸ்டாலிக் அழுத்தத்தை (Diastolic pressure) குறிக்கும். இது, இதயம் தன்னிடம் இருந்த ரத்தத்தை வெளியேற்றிய பிறகு, தன் அளவில் விரிந்து உள்ளே வருகின்ற ரத்தத்தைப் பெற்றுக்கொள்ளும்போது ஏற்படுகிற அழுத்தம்.

எது நார்மல்?

ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்தி நிர்வகிப் பதில் சிறுநீரகங்கள், அட்ரினல் சுரப்பிகள், மூளை மற்றும் நரம்பு மண்டலம் உள்ளிட்டவை மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்தத் தொடர் சங்கிலி அமைப் பில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் ரத்த அழுத்தம் அதிகரித்துவிடும். இது சிலருக்கு தற்காலிகமாகவும், பலருக்கு நிரந்தரமாகவும் அதிகரிக்கக்கூடும். ஒரு நபருக்கு 100/70 mm Hg முதல் 140/90 mm Hg வரை உள்ள ரத்த அழுத்தத்தை ‘நார்மல்’ என்று உலக சுகாதார நிறுவனம்  வரையறை செய்துள்ளது. 140/90 mm Hgக்கு மேல் அதிகரித்தால் அது உயர் ரத்த அழுத்தம் (ஹை பிரஷர் -  High Pressure), 90/60 mm Hgக்கு குறைவாக இருந்தால் அது குறைந்த ரத்த அழுத்தம் (லோ பிரஷர் - Low Pressure).

உயர் ரத்த அழுத்தத்துக்கான காரணங்கள்...

*மரபு

*உடல் பருமன்

*உடல் உழைப்பின்மை, உடற்பயிற்சியின்மை

*உணவில் அதிக உப்பு சேர்ப்பது

*சிறுநீரகம், இதயம் சார்ந்த பாதிப்புகள்

*சர்க்கரை வியாதி

*பிறவி ரத்தக்குழாய் பாதிப்பு

*புகை, மதுப்பழக்கம்

*மனஅழுத்தம்

*உறக்கமின்மை, ஓய்வின்மை

*வலி, ஹார்மோன் மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் உட் கொள்வது

குறைந்த ரத்த அழுத்தத்துக்கான காரணங்கள்...

*ரத்தசோகை

*வாந்தி, பேதி போன்றவற்றால் உடலில் நீர் வற்றிப்போவது

*அதிகநேரம் வெயிலில் இருப்பது உள்ளிட்டவை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்