பிங்க் ரிப்பன்!

விழிப்பு உணர்வு

‘‘இந்தியாவில் மார்பகப்புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகரித்திருக்கிறது. இதில், 28% பாதிக்கப்பட்டவர்களாகவும், 64% மரணத்தை  தழுவுபவர்களாகவும் இருக்கிறார்கள்’ என்று `இண்டியா டர்ன்ஸ் பிங்க்' (India Turns Pink) அமைப்பின் நிறுவனர் ஆனந்தகுமார் சொல்லும் விவரங்கள் அதிரவைக்கின்றன. டெல்லி, லக்னோ மற்றும் தமிழகத்தில் செயல்படும் இந்த அமைப்பின் நோக்கம், கேன்சர் இல்லாத தேசத்தை உருவாக்குவது.

‘‘ஆனால் அதற்கு பெறும் சவாலாக இருப்பது, ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் புற்றுநோய் சதவிகிதம்தான். அதனால் தற்போது இதற்கு அதிக கவனம் கொடுத்து வருகிறோம். பெரும்பாலும் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களே இந்நோயால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

வரும் முன் காப்போம் என்பது, மார்பகப் புற்றுக்கு மிகப் பொருந்தும். காரணம், இந்நோயை ஆரம்பகட்டத்திலேயே கண்டறிந்துவிட்டால், மார்பகத்தை அகற்ற வேண்டிய தேவையின்றியே குணப்படுத்திவிடலாம். அந்த வாய்ப்பை நழுவவிடாமல், வீட்டிலேயே சுயபரிசோதனை செய்து இதை கண்டறியலாம். இது தொடர்பாக இதுவரை 5,45,000 பெண்களுக்கு மேல் விழிப்பு உணர்வு கொடுத்திருக்கிறோம்’’ என்று சொல்லும் ஆனந்தகுமார், தங்கள் அமைப்பின் அடையாளமான பிங்க் ரிப்பன் பற்றிச் சொல்லும்போது, ‘‘இதை அனைவரும் எய்ட்ஸ் விழிப்பு உணர்வு என்று நினைத்துக்கொள்கிறார்கள். அதனால், ‘இந்தியா டர்ன்ஸ் பிங்க்’ என்று அதை ஹைலைட் செய்திருக்கிறோம். அடுத்த முயற்சியாக, வரும் செப்டம்பர் 11 காலை 6 மணி அளவில், தீவுத்திடலில் 30,000 பெண்கள் இணைந்து விழிப்பு உணர்வு கொடுக்க இருக்கிறார்கள். அவள் விகடன், எங்களின் தமிழ் மீடியா பார்ட்னராக இருப்பது மகிழ்ச்சி. கைகோப்போம்... புற்றுநோய் இல்லாத தேசத்தை உருவாக்குவோம்!’’ என்று அழைக்கிறார் ஆனந்தகுமார்.

 கே.அபிநயா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்