லட்சங்களில் வருமானம்... சமையலில் சாதிக்கும் சிந்தனா!

பிசினஸ்

பொழுதுபோக்குக்காக கேக் செய்ய ஆரம்பித்து, தற்போது கேக் பிசினஸில் மாதம் அசால்டாக லட்சத்தை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த இளம்பெண் சிந்தனா மாணிக்கவேல்.

‘‘ஏழு வயசுல இருந்தே நான் டென்னிஸ் பிளேயர். தேசிய, சர்வதேச போட்டிகள்ல நிறைய பதக்கங்கள் வாங்கியிருக்கேன். ஆனா, திடீர்னு ஏற்பட்ட உடல்நலக்குறைவு என்னை ஸ்போர்ட்ஸை விட்டு வெளியேற வெச்சது. அந்த வலி, வேதனையை மறக்க படிப்புல கவனம் செலுத்தினேன். எம்.ஏ பப்ளிக் ரிலேஷன் முடிச்சுட்டு ஒருபக்கம் வேலை தேடிக்கிட்டே, மாலை நேரத்துல டென்னிஸ் பயிற்சி கொடுத்துட்டு இருந்தேன். ஆனாலும் பகல் நேரம் அதிகம் போரடிக்க, கூகுள் பார்த்து கேக் செய்ய கத்துகிட்டேன். ஒருநாள் ஃபேமிலி, ஃப்ரெண்ட்ஸ்னு எல்லோரும் டூர் கிளம்பினோம். அப்போ, நான் செஞ்சு வெச்சிருந்த கேக் வீணாகிடக் கூடாதேனு எல்லாத்தையும் பேக் செஞ்சு எடுத்துட்டுப் போனேன். டூர்ல என் கேக் சூப்பர் டூப்பர் ஹிட்டாக, கூடவே என் ஃப்ரெண்ட்ஸ், ‘இதை நீ பிசினஸாவே செய்யலாம்’னு சொல்லி, பிள்ளையார்சுழியும் போட்டுவிட்டாங்க’’ என்றவர்,

‘‘ஆரம்பத்தில் நட்பு, உறவுனு விரும்பிக் கேட்கிறவங்களுக்கு மட்டும் கேக் செய்து கொடுத்துட்டு இருந்தேன். கேக்கோட டேஸ்ட் பிடிச்சுபோய் ஒருத்தர் மூலம் ஒருத்தர்னு ஆர்டர்கள் வந்து சேர்ந்து பிசினஸ் பிக்-அப் ஆச்சு. ஆனாலும் திட்டமிடல் இல்லாம இருந்த என்னிடம், என் அப்பா மாணிக்க வேலும், இல்லத்தரசியான அம்மா குந்தவியும், ‘உங்கிட்ட இருக்கிற திறமையை முழுமையா பயன்படுத்திக்கோ’னு அறிவுரை சொல்ல, இந்த கேக் பிசினஸை முழு நேரமா செய்ய முடிவெடுத்தேன்" என்றவர், தொடர்ந்து ஒவ்வொரு படியாக வேகமாக முன்னேறியிருக்கிறார். 
‘‘கேக் மற்றும் அதைச் சார்ந்த பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் செய்யக் கத்துக்க, பெரிய ஹோட்டல்ல வேலை செய்ற செஃப் பலர்கிட்ட, இன்டர்ன்ஷிப் செய்ய வாய்ப்பு கேட்டேன். ஆனா, நான் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கோர்ஸ் படிக்காததால சொல்லித்தர மறுத்துட்டாங்க. அதனால குக்கரியில் பல ஷார்ட் டெர்ம் பயிற்சிகளை முடிச்சு, இதைப் பத்தி ஏ டு இஸட் கத்துக்கிட்டேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்