லூமினக்ஸ் யூனோ... தங்கத்துக்கு மாற்று உலோகமா?

ஆபரணம்

ங்கம்... உச்சரிக்கும்போதே நம்மை உற்சாகத்தின் உச்சத்துக்குக் கொண்டுசெல்லும் ஓர் உலோகம். காது, கழுத்து, கைகளில் மின்னி, பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் தங்க நகைகள் மீது, பட்டி முதல் சிட்டி வரை தனி கிரேஸ்தான்.

20, 25 வருடங்களுக்கு முன்பு சவரனே 2,000 முதல் 3,000 ரூபாய்க்குள் கிடைத்த தங்கத்தின் விலை, இன்றோ பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் காரணமாக, ஒரு கிராம் தங்கமே கிட்டத்தட்ட 3,000 ரூபாய்க்கு விற்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்தியர்களின் பாரம்பர்யத்தில் திருமணங்கள் தங்கமின்றி அமையாது என்ற நிலையில், சாமான்யர்களின் வாழ்வில் தங்கம் என்பது கனவாகிப் போய்விட்டது என்றே சொல்லலாம்.

இந்நிலையில்... தங்கத்துக்கு மாற்றாக ஓர் உலோகம், அதுவும் சல்லிசான விலையில் கிடைத்தால்... நடுத்தர வர்க்க மக்கள்கூட ஒட்டியாணம் வாங்கி அணியலாம் என்ற நிலையை அது உருவாக்கினால்... அப்படி ஒரு மாற்று உலோகம்தான் தற்போது இந்திய ஆபரணச் சந்தையில் தன்னுடைய முத்திரையைப் பதிக்கக் களமிறங்கியுள்ளது. ‘தங்கத்துக்கு மாற்று’ என்ற அடைமொழியுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய உலோகக் கலப்பின் பெயர், ‘லூமினக்ஸ் யூனோ’ (lumineux uno). நான்கு வெவ்வேறு காஸ்ட்லி உலோகங்களான தங்கம், பிளாட்டினம், பலேடியம், வெள்ளி ஆகியவற்றைக் கலந்து இந்த லூமினக்ஸ் யூனோ தயாரிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்