கூழாங்கல் ஓவியம்... சொல்கிறதே காவியம்!

கைவண்ணம்

ல்லிலே கலைவண்ணம் செய்கிறார், இத்தாலியைச் சேர்ந்த மிசெலா புஃபாலினி.

சின்ன, பெரிய கூழாங்கற்கள்... இவைதான் மிசெலாவின் ஓவியக் களம். அவற்றில் எல்லையற்ற கற்பனையுடனும் கண்ணைக் கவரும் வண்ணங்களுடனும் இவர் உருவாக்கும் பெயின்ட்டிங்குகள்... அவ்வளவு அழகு!

‘`இயற்கையான பின்னணியில் இயற்கையை வண்ணம் தீட்ட நினைத்தேன். அப்படித் தோன்றியவைதான் இந்தக் கல் ஓவியங்கள். ஒவ்வொரு ஓவியத்துக்கும் சரியான அளவிலான கற்களைச் சேகரிக்க வேண்டும். அதுதான் இதில் உள்ள சவால். மற்றபடி, என் ஓவியங்களுக்கு எந்த விதிமுறையும் கிடையாது. எனக்கு என்ன தோன்றுகிறதோ, அதுவே எனது லேண்ட்ஸ்கேப்பில் வரும். இறுதியில், ஒவ்வொரு கல்லும் தனக்குள் ஓர் ஓவிய உருவத்தை ஒளித்துவைத்திருந்ததைப் பார்க்கும்போது எனக்கே வியப்பாக இருக்கும்’' என்கிறார் மிசெலா.

பாறைகளில் ஓய்வெடுக்கும் பென்குயின்கள், வரிசையான பூக்கள், தொட்டிகளில் சிரிக்கும் சப்பாத்திக்கள்ளிச் செடிகள், மரத்தடி வீடு, படகில் திருமண ஜோடி, பட்டங்களை ரசிக்கும் காதலர்கள் என விரியும் மிசெலாவின் கல் ஓவியங்களை தங்கள் வீட்டை அலங்கரிக்க பலரும் விரும்பி வாங்கிச் செல்கிறார்கள். சிலர் மிசெலாவை கையோடு அழைத்துச்சென்று, தங்கள் வீட்டின் சுவர் ஒன்றில் இந்த கல் ஓவியம் பதித்துத் தரச்சொல்லிக் கேட்கிறார்கள்.

மிசெலாவின் ஒவ்வொரு கற்பனையும் ஒரு குட்டி தேவதை கதை படிக்கும் உணர்வைக் கொடுப்பதுதான், அவர் கல் ஓவியங்களின் சிறப்பு!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்