கோகுலாஷ்டமி, விநாயகர் சதுர்த்தி... வழிபாட்டு முறைகள்!

பண்டிகை

ந்த ஆவணியில் கோகுலாஷ்டமி, விநாயக சதுர்த்தி என இரண்டு பண்டிகைகளைக் கொண்டாடவிருக்கிறோம். அந்த திருநாட்கள் பற்றிய ஆன்மிகத் தகவல்களைச் சொல்கிறார், கே.குமார சிவாச்சாரியார்.

கோகுலாஷ்டமி

ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று ரோஹிணி நட்சத்திரத்தில், நள்ளிரவில் வசுதேவருக்கும், தேவகிக்கும் சிறையில் மகனாக அவதரித் தார் கிருஷ்ணர். விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான கிருஷ்ண அவதார பிறப்பே ‘கோகுலாஷ்டமி’ என அழைக்கப்படுகிறது. இந்த துர்முகி வருடத்தில், ஆவணி 9-ம் தேதி (ஆகஸ்ட் 25), வியாழக் கிழமை, தேய்பிறை அஷ்டமியும், ரோஹிணி நட்சத்திரமும் சேரும் நாளில் கோகுலாஷ்டமி வருகிறது.

பூஜையறை வழிபாடு

வீட்டு வாசலில் இருந்து பூஜையறை வரை கிருஷ்ணரின் திருப்பாதங்களை மாவு கோலத்தில் வரைய வேண்டும். அப்படிச் செய்வதால் கிருஷ்ணர் வீட்டுக்கு வந்திருப்பதாக ஐதீகம். பூஜையறையில் கிருஷ்ணரின் விக்கிரகத்தையோ அல்லது படத்தையோ அலங்கரித்து, இரண்டு புறங்களிலும் விளக்கேற்றி... தாம்பூலம், தேங்காய், துளசி, ஐந்து வகைப் பழங்கள், வெண்ணெய் மற்றும் கிருஷ்ணருக்குப் பிடித்த பட்சணங்களை நிவேதனம் செய்து, கிருஷ்ண அஷ்டோத்திர நாமாவாளி அர்ச்சனை செய்து தூப, தீப  ஆரத்தி செய்யவும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்