பிளாஸ்டிக் கப்களில் நைட் லேம்ப்!

கிராஃப்ட்

‘‘அவள் விகடனில் வந்த கிராஃப்ட் பக்கங்களைப் பார்த்துதான் நிறைய கிராஃப்ட் வேலைகள் செய்யக் கத்துக்கிட்டேன். நாளடைவில் இதுவே என் தொழிலா மாறிடுச்சு. இப்போ கிராஃப்ட் மூலம் எனக்கான மாத வருமானத்தை ஈட்டிக்கிறேன்’’ என்று சொல்லும் சென்னையைச் சேர்ந்த தீபலட்சுமி, யூஸ் அண்ட் த்ரோ கப்பில் நைட் லேம்ப் செய்யக் கற்றுத்தருகிறார் இங்கு.

தேவையானவை: யூஸ் அண்ட் த்ரோ பிளாஸ்டிக் கப்புகள் - 50, சீரியல் பல்ப் செட் - 1, மெழுகுவத்தி, தீப்பெட்டி, ஸ்டாப்ளர், இரும்புக் கம்பி.

படம் 1: இரும்புக் கம்பியை எரியும் மெழுகுவத்தியில் காட்டி சிறிது சூடாக்கிக்கொள்ளவும்.

படம் 2: 
யூஸ் அண்ட் த்ரோ கப்புகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி (எத்தனை வேண்டுமானாலும் அடுக்கிக்கொள்ளலாம்), சூடான இரும்புக்கம்பியால் ஒருசேர துளையிட்டுக்கொள்ளவும்.

படம் 3: துளையிட்ட கப்புகளை பக்கவாட்டில் ஒன்றுடன் ஒன்று இணைத்து படத்தில் காட்டியுள்ளபடி ஸ்டாப்ளரால் இணைத்துக்கொள்ளவும்.

படம் 4: படத்தில் காட்டியுள்ளபடி டம்ளர்களை பக்கவாட்டில் இணைத்துக் கொண்டே வரவும்.

படம் 5: தேவையான அகலத்துக்கு கப்புகளை இணைத்த பின், இரண்டு முனைகளையும் ஒன்று சேர்த்து ஸ்டாப்ளரால் வட்ட வடிவில் இணைக்கவும்.

படம் 6: இணைக்கும்போது டம்ளர்கள் ஒன்றோடு ஒன்று இணையில்லாமல் இருந்தால் சரிசெய்த பின் இணைக் கவும். இப்போது லைட் லேம்ப்க்கான முதல் வரிசை தயார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்