குறும்புக் கண்ணன்... குட்டிக் கதைகள்!

ஆன்மிகம்

கண்ணன் கதைகள், பெரியவர்களையும் குழந்தையாக்கி ரசிக்கவைப்பவை! அவற்றில் சில...

வெண்ணெய்க்காகவே பிறந்தாரா கண்ணன்?!

ஒருநாள் வைகுண்டத்தில் வழக்கமான பூஜைகள் நடந்துகொண்டிருந்தபோது, பூமியில், யசோதை காய்ச்சிய வெண்ணெயின் வாசனை வைகுண்டத்தை அடைய, ‘திகட்டிப்போன இந்த அமிர்தத்தை விட்டுவிட்டு, பூமிக்குப்போய், அந்த வெண்ணெயை விழுங்கி வரலாமே!’ என நினைத்தார் கண்ணன். அப்போது அவருக்கு தூபம் காட்டப்பட்டது. மேக மண்டலத்தைப் போன்ற அந்த தூபப் புகை, ஒரு கணம் ஸ்வாமிக்கும் பக்தர்களுக்கும் இடையே திரை போட, அந்த இடைவெளியில் பூமியில் இறங்கி ஓர் இரவில் ஒருத்தி மகனாகப் பிறந்து, ஒருத்தி மகனாக ஒளிந்து வளர்ந்து, ஆயர்பாடி வந்து, ஆசை தீர வெண்ணெய் தின்று, பலவிதமான லீலைகள் செய்து கிருஷ்ணாவதாரத்தை முடித்துக் கொண்டு, தனது இருப்பிடத்துக்கு  திரும்பிவிட்டார் கண்ணன் என்கிறார் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார்...

`சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி விண்ணோர்கள் நன்னீர் ஆட்டி அத்தூபம் தராநிற்கவே அங்கு ஓர் மாயையினால் ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ணப்போந்து இமிலேற்று வன் கூன் கோட்டிடை ஆடினை கூத்து அடலாயர்தம் கொம் பினுக்கே!'

கிருஷ்ண ஜெயந்தி அன்று இந்தப் பாடல் பாடி வழிபட, உங்கள் வீட்டுக்கும் வருவான் வெண்ணெய் திருடன்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்