வாசகிகள் கைமணம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 200சாப்பிட்டுப் பாருங்க... சாமை ஸ்வீட்!

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து வழங்கியிருப்பவர் ‘சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன்

1. கோபி குலிஸ்தான்

தேவையானவை: பெரிய சைஸ் காலிஃப்ளவர் - ஒன்று, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

கிரேவிக்கு: பெரிய வெங்காயம் - 4, சின்ன சைஸ் தக்காளி - 8, இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், தயிர் - 2 கப், முந்திரிப்பருப்பு - 10, கரம் மசாலாத்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், சீரகம் - சிறிதளவு, வெண்ணெய் - 50 கிராம், கசகசா - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - அரை கப்.

செய்முறை: காலிஃப்ளவரை உப்பு சேர்த்த வெந்நீரில் அழுத்தி எடுத்து, சுத்தம் செய்து சின்னச் சின்ன பூக்களாக நறுக்கி, எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து எடுத்து வைக்கவும். வெங்காயத்தையும் எண்ணெயில் பொன்நிறமாக வதக்கி மிக்ஸியில் அரைத்து, இஞ்சி - பூண்டு விழுதுடன் சேர்த்துக் கலந்து  வைக்கவும். தக்காளியை விழுதாக அரைக்கவும். முந்திரிப்பருப்பு, கசகசா இரண்டையும் விழுதாக அரைக்கவும்.

கடாயில் அரை கப் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து வெண்ணெய், வெங்காய விழுது சேர்க்கவும். முந்திரி - கசகசா விழுது, மஞ்சள்தூள், கரம் மசாலாத் தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), அரைத்த தக்காளி விழுது சேர்த்து, நன்கு கொதிக்கவிடவும். பிறகு தயிர் சேர்க்கவும். வதக்கி வைத்துள்ள காலிஃப்ளவர் துண்டுகளைப் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி, தேவைப்பட்டால் சிறிதளவு உப்பு சேர்த்து, கொத்தமல்லித்தழையைக் கிள்ளிப் போட்டு பரிமாறவும்.

சப்பாத்தி, பூரி, பரோட்டா, நாண் ஆகியவற்றுக்கு  சூப்பரான சைட் டிஷ் இது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்