சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
குலம் தழைக்க அருளும் கொண்டத்து பத்ரகாளி!

குழந்தை வரம் வேண்டிவரும் பெண்களின் மடியும் மனதும் நிறைத்து அருளுகிறாள், கொண்டத்து பத்ரகாளியம்மன்.

ஈரோடு நகரில் காவிரிக்கரையின் தென்கோடியில் ரயில்வே சந்திப்புக்கு மிக அருகிலிருக்கிறது, கொண்டத்து பத்ரகாளியம்மன் கோயில். தீக்குண்டம் இறங்கும் நேர்த்திக்கடன், கல்யாண வரம், குழந்தை வரம் என்று அம்மனின் சிறப்புகள் அவள் சந்நிதிக்கு ஆயிரமாயிரம் பக்தர்களை அழைத்துவந்தபடி இருக்கிறது.

கோயிலின் பரம்பரை டிரஸ்ட்டியான சகுந்தலா, அதன் தலவரலாறு சொன்னார். ‘‘கிட்டத்தட்ட 125 ஆண்டுகளுக்கு முன், எங்கள் பரம்பரையைச் சேர்ந்த முப்பாட்டன் நம்பியா பிள்ளை, தன் சிறு பிராயத்தில் மணலில் விளையாடிக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது அவரும் அவருடன் விளையாடிய சிறுவர்களும் ஒரு கற்சிலை மணலில் புதைந்திருந்ததைப் பார்த்திருக்கிறார்கள். மற்ற சிறுவர்கள் அதைத் தோண்டி எடுக்கப்பார்க்க, எவராலும் இயலவில்லை. நம்பியா பிள்ளை அருள் வந்தவராக, அத்தனை வேகத்துடனும் பலத்துடனும் மணலில் புதைந்திருந்த அந்தச் சிலையை வெளியே எடுத்திருக்கிறார். ஆனால், அதை என்ன செய்வது என்று தெரியாமல், அங்கேயே வைத்துவிட்டு வந்திருக்கிறார். அன்று இரவே நம்பியா பிள்ளையின் கனவில் வந்த பத்ரகாளியம்மன், ‘நான் கொண்டத்து பத்ரகாளியம்மன்.

என்னை இதே இடத்தில் வைத்து பூஜை செய்’ என உத்தரவிட்டிருக்கிறாள். இந்த விவரத்தை அவர் வீட்டில் இருந்தவர்களிடம் சொல்ல, அதன்பிறகுதான் பெரியவர்கள் இந்தச் சிலையை வந்து பார்த்திருக்கிறார்கள். உடனடியாக, ஒரு ஓட்டுக் கட்டடத்தில் அந்தச் சிலையை நிறுவி பூஜை செய்து வந்திருக்கிறார்கள்.

அம்மன் சிலைக்கு அருகில் வேம்பும் அரசும் தானாக ஒன்றாகக் கிளம்ப, அதையும் வழிபடத் தொடங்கி இருக்கிறார்கள் ஊர்மக்கள். அம்மரத்தில் பல தம்பதிகள் வந்து தொட்டில் கட்டி குழந்தை வரம் வேண்டி மனமுருக வேண்டத் தொடங்கியிருக்கிறார்கள். இப்படிப் பலரும் பல வேண்டுதல்களுக்காக அம்மனிடம் சரணடைய, அவற்றையெல்லாம் அன்னை நிறைவேற்றித் தர, அதே நம்பிக்கையோடு நிறைய பக்தர்கள் அவளைத் தேடி வர ஆரம்பித்தார்கள். கேட்டதைத் தந்த அம்மனுக்குக் காணிக்கையாக, பக்தர்கள் தாங்களே முன்வந்து ஆளுக்கொரு கட்டடமாக எழுப்பி இந்தக் கோயிலை எடுத்துக் கட்டியிருக்கிறார்கள்’’ என்றார் சகுந்தலா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்