டிப்ஸ்... டிப்ஸ்...

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ. 100

கோவைக்காய் பழுத்துவிட்டால்... நறுக்கி, வதக்கி, தேவையான உப்பு, புளி, மிளகாய் சேர்த்து அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, அரைத்த விழுதை சேர்த்து வதக்கி தொக்கு செய்தால், சூப்பர் சுவையில் இருக்கும்.

- டி.இந்திரலட்சுமி, பம்மல்


ருகம்புல் சாறு, ஆரஞ்சுச் சாறுடன், நாட்டுச் சர்க்கரை, இஞ்சிச் சாறு கலந்து பருகினால் அசதி விலகும். இஞ்சிச் சாறு, எலுமிச்சைச் சாறு, சீரகத்தூள் உப்புடன் நீர் சேர்த்துப் பருகினால்... மலச்சிக்கல், வாய்வுத் தொல்லை விலகும்.

- சு.நவீனா தாமு, பொன்னேரி

வெண்டைக்காய் பொரியல் செய்யும்போது, கடைசியில் கடலை மாவு கொஞ்சம் தூவி, சில நிமிடங்கள் அடுப்பை `சிம்’மில் வைத்துக் கிளறி இறக்கினால், சுவை நன்றாக இருக்கும்.

- ஆர்.பிருந்தா ரமணி, பெங்களூரு

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்