நேர மேலாண்மை பழக... ஆரம்பநிலை ஆலோசனைகள்!

அவள் 16

`ஒரு நாளின்  24 மணி நேரத்தில் கல்லூரி, வேலை, வீடு, நண்பர்கள் என்று அனைத்துக்கும், அனைவருக்கும் நேரம் ஒதுக்க வேண்டியுள்ளது.  ‘24’ படத்தில் சூர்யா வைத்திருப்பதுபோல வாட்ச் மெக்கானிக்கிடம் ஒரு டைம் மெஷின் வாங்கினால் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ஃப்ரீஸ் மோடில் வாழ்க்கையை நிறுத்தி ரசிக்கலாமே’ என கிரேஸியாக நினைப்பவர்களுக்குக் கைகொடுக்கவல்ல சில டைம் மேனேஜ்மென்ட் டிப்ஸ் இங்கே...

தூக்கமும் சோம்பலுமாகப் பொழுதைக் கழிக்கும் வெட்டி ஆபீஸர் களுக்குக் காலம் கொடுத் திருக்கும் அதே 24 மணி நேரத்தையே வெற்றியாளர் களுக்கும் மேதைகளுக்கும் கொடுத்திருக்கிறது என்ற உண்மையை உணர வேண்டி யது, நேர மேலாண்மையின் முதல் படி.

எப்போதும், வேலைசெய்ய அமர்ந்த அடுத்த ஐந்து நிமிடங்களில் வேலையைத் தொடங்கி விடுங்கள். கணினி முன் அமர்ந்ததும், இணையத்தில் அலைபாய அரை மணி நேரம்,  வாட்ஸ் அப் செய்திகளுக்குப் பதில் அனுப்ப கால் மணி நேரம் என தாமதப் படுத்தினால், அந்த வேலையின் தொடக்கப் புள்ளி தள்ளிக்கொண்டே போகும்.

குறித்த நேரத்தில், குறித்த வேலையை முடிக்க ஓர் எளிய யோசனை... உங்களைச் சுற்றி உள்ளவர்களிடம் உங்கள் பணி அட்டவணையைத் தெரியப்படுத்துங்கள். ‘10 மணிக்குள்ள இந்த வேலையை முடிச்சுட்டு, 11 மணிக்கு அந்த க்ளெயன்ட்டை பார்க்கப் போறோம்னு அவன்கிட்ட சொல்லிட்டோமே..? முடிக் கலையா, கிளம்பலையானு கேப்பானே..?’ என்று, பக்கத்து ஸீட்காரருக்கு பதில் சொல்லும் சங்கடத்துக்காகவாவது குறித்த நேரத்தில் வேலையை முடிப்பீர்கள்.

குறைந்தபட்சம் வாரத்தின் ஏதாவது ஒரு நாளில், உங்கள் செயல்பாடு களை மணி நேரக்கணக்கில் குறித்து வைத்து, அன்று யாரால் அல்லது எதனால் அதிக நேரம் வீணாக நேரிட்டது என்பதைக் கண்டறிந்து சரிசெய்து கொள்ளுங்கள்.

வண்ண வண்ண மை பேனாக்களில் நீங்கள் செய்யும் செயல்களை  தினமும் ஒரு பாக்கெட் டைரியில் குறித்து வாருங்கள். உதாரணமாக, நேரத்தை வீணாக்கக்கூடிய செயல்களை கறுப்பு மை பேனாவாலும், வெற்றிகரமாக செய்துமுடித்த காரியங்களை பச்சை மை பேனாவாலும், நிலுவையில் உள்ள வேலைகளை சிவப்பு மை பேனாவாலும் குறித்துக்கொண்டே வர, எந்த நிறம் டைரியில் அதிகம் ஆக்கிரமித்திருக்கிறதோ அதிலிருந்து பெற்றுக்கொள்ள லாம்... உங்களுக்கான நேர மேலாண்மை மதிப்பெண்களை!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்