இனிமை... புதுமை... - 30 வகை சமையல் புத்தகத்தில் பங்கேற்க ஆசையா?!

அன்பார்ந்த வாசகிகளே...

அவள் விகடன் 19-ம் வருட கொண்டாட்டத்தில் நீங்களும் பங்கேற்க அரிய வாய்ப்பு காத்திருக்கிறது.

19-ம் ஆண்டு சிறப்பு இதழுடன் வெளிவரவிருக்கும் 30 வகை சமையல் புத்தகம்... வாசகிகளான உங்களால்தான் நிரம்ப இருக்கிறது!

ஆம்... உங்கள் கைவண்ணத்தில் உருவான புத்தம்புது ரெசிப்பியை உலகமே ருசிக்கச் செய்யலாம். இதற்கு நீங்கள் செய்யவேண்டியதெல்லாம்... சொந்தமாக நீங்களே உருவாக்கி, உங்கள் வீட்டில் செய்து பாராட்டு பெற்ற உணவை எப்படி செய்ய வேண்டும் என்கிற செய்முறை விளக்கத்தோடு, தேவையான பொருட்களையும் குறிப்பிட்டு (படித்தால் செய்து பார்த்துவிட முடிகின்ற அளவுக்குத் தெளிவாக) எழுதி அனுப்புவதே!

அதிகபட்சமாக 3 ரெசிப்பிக்கள் வரை அனுப்பலாம். இதுவரை வெளியாகாத, நீங்களே உருவாக்கிய புதிய உணவாக உங்கள் ரெசிப்பி இருப்பது அவசியம். உங்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இணைப்பதோடு, தொலைபேசி எண்ணையும் மறக்காமல் குறிப்பிடுங்கள்.

தேர்ந்தெடுக்கப்படும் 30 வாசகிகளின் 30 ரெசிப்பிக்கள், 19-ம் ஆண்டு சிறப்பிதழுடன் வெளிவரும் 32 பக்க இணைப்பில் பிரசுரமாகும். ஆசிரியரின் தேர்வே இறுதியானது.

ரெசிப்பிக்கள் எங்களுக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 12.9.16.

வாருங்கள்... கைகோக்கலாம்... மணக்க வைக்கலாம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்