பெண்ணால் முடியும்!

நிகழ்வு

ரு பெண்ணின் முன்னேற்றம் என்பது வீட்டின் முன்னேற்றம் மட்டுமல்ல... நாட்டின் முன்னேற்றமும்கூட. இந்த வாசகம் காலம் காலமாகச் சொல்லப்பட்டு வந்தாலும், யதார்த்தம் மிகவும் பின்தங்கியே இருக்கிறது. இவர்களுக்கு எல்லாம் வீட்டிலிருந்தே சம்பாதிக்க, அதைத் தொழில்நுட்பத்தின் மூலம் பிரபலமாக்க முடியும் என்பதற்கான ஓர் உதாரணம் தூத்துக்குடியைச் சேர்ந்த திவ்யா.

“சின்ன வயசுல இருந்தே கேக் அவ்ளோ புடிக்கும். அதனாலேயே கேக் செய்ய கத்துக்கிட்டேன். அப்படி பண்ற கேக் போட்டோக்களை ஃபேஸ்புக் பேஜ்ல அப்லோட் பண்ண ஆரம்பிச்சேன். நிறைய லைக்ஸ் எப்படி செய்யறதுன்னு கத்து கொடுக்கறீங்களான்னும் கேக்க ஆரம்பிச்சாங்க. தெரிஞ்ச சர்க்கிள்ல இருந்து ஆர்டர் வர ஆரம்பிச்சதும்தான், ‘ஓஹோ, இது நமக்கான தொழில்’னு தோண ஆரம்பிச்சது’’ என்கிறார் திவ்யா. இப்போது வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலமாக ‘ஃப்ளேவர்டு’ என்கிற பெயரில் கேக் பிசினஸ் மூலம் வருமானம் பார்க்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்