பண்டிகைக்கால பட்ஜெட்... சமாளிப்பது எப்படி?

ஒரு வழிகாட்டல்

இது பண்டிகைக்காலம். கொண்டாட்டமும், செலவும் ஒருசேர நிகழும் காலகட்டம் என்பதால் மாத பட்ஜெட் போடுபவர்கள் கொஞ்சம் `ஜெர்க்' அடித்து நிற்பார்கள். திட்டமிட்டால் எந்தவித சிரமமும் இல்லாமல் எளிதாக கொண்டாடலாம் என்கிறார் சென்னையைச் சேர்ந்த நிதி ஆலோசகர் அனிதா பட்.

1. லிஸ்ட் போடுங்கள்

விநாயகர் சதுர்த்தி, பக்ரீத், தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் என நீங்கள் கொண்டாடப் போகும் பண்டிகைகளின் லிஸ்ட் போடுங்கள். அவற்றுக்கு என்னவெல்லாம் தேவை, எது அவசியம், எது ஆடம்பரம் என எல்லாவற்றையும் குறித்துக்கொள்ளுங்கள்.

2. அவசியத் தேவைக்கு முன்னுரிமை

ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம் என்பதைப் பார்த்து உங்கள் பட்ஜெட்டை எகிற வைக்காதீர்கள். எது அத்தியாவசியமோ அதை மட்டுமே வாங்க பிளான் போடுங்கள். விளம்பரங்களில் மனதை அலைபாய விடாதீர்கள்.

3. துணிகள் - கவனம் தேவை

வேலைக்குச் செல்பவர்கள் அதிக துணிகள் வைத்திருந்தால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வீட்டில் இருப்பவர்களுக்கு வாங்கிக் கொடுங்கள். வீட்டில் உள்ளவர்களும் நீண்ட நாட்கள் உழைக்கும் ஆடைகளாகப் பார்த்து வாங்குங்கள். ஆஃபரை நம்பி குறைவான விலை ஆடைகளை அள்ள வேண்டாம். துணிகளுக்கு போடும் பட்ஜெட் என்பது முன்பின் இருக்கலாம் என்பதால், இறுக்கிப்பிடிக்காமல் கொஞ்சம் கூடுதலாக பணம் ஒதுக்குங்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்