ஒரு டஜன் யோசனைகள்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் - ப்ளஸ், மைனஸ்...

இனி வரப்போகிற மாதங்கள் எல்லாம் பண்டிகை காலம் என்பதால் வீட்டு உபயோக பொருட்களில் ஆரம்பித்து லேப்டாப், கார் வரை அத்தனை பொருட்களின் விற்பனையும் நம்மை கவர ஆரம்பிக்கும். ஆஃபர்கள் வசீகரிக்கும், அதிலும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களுக்கு கேட்கவே வேண்டாம். உண்மையில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் நடப்பது என்ன? பொருட்களை ஆஃபரில் வாங்குவது லாபமா... நஷ்டமா? தெரிந்து கொள்ளலாம்!

1. எக்ஸ்சேஞ்ச் ஆஃபரின் ப்ளஸ் என்ன?

கையில் இருந்து செலவழிக்கும் தொகை குறையும். நீங்கள் வாங்க விரும்புகிற பொருளை குறைவான விலையில் வாங்கவும், விற்க நினைக்கிற பொருளையும் நல்ல விலையில் விற்கவும் முடியும்.

2. உங்கள் சாய்ஸ்

உங்களுடைய பொருளை எக்ஸ்சேஞ்ச் செய்வது என்று முடிவெடுத்தால் நேரடியாக விற்பது, ஆன்லைன் மூலம் விற்பது என இரண்டு வகைகள் இருக்கின்றன. எதில் அதிக லாபம் கிடைக்கும் என்பதை தெரிந்துகொண்டு பிறகு உள்ளே இறங்குங்கள்.

3. புது மாடல் தவிர்க்கவும்

சந்தையில் புதிதாக வந்திருக்கும் மாடலை எக்ஸ் சேஞ்சில் வாங்குவதைத் தவிர்க்கவும். ஒருவேளை, அதன் பயன்பாடு அத்தனை சிறப்பாக இல்லையென்றால் சந்தையில் அதன் விலை பெருமளவில் குறையும். எனவே, தொடர் கண்காணிப்பு அவசியம்.

4. டேட்டாவை  அழியுங்கள்

மொபைல், கேமரா போன்றவற்றை எக்ஸ்சேஞ்ச் செய்வதற்கு முன்பு அவற்றில் உள்ள மெமரி கார்டை எடுத்துவிடவும். மொபைலில் உள்ள கான்டாக்ட்ஸ் மற்றும் போட்டோக்களை பேக்கப் எடுத்துவிட்டு சம்பந்தப்பட்ட பொருளில் உள்ள டேட்டாக்களை முற்றிலும் அழித்துவிடுங்கள். இல்லையென்றால், வாங்குபவர் உங்கள் டேட்டாவை மிஸ்யூஸ் செய்யும் அபாயம் உண்டு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்