அனுபவங்கள் பேசுகின்றன!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ. 200 ராமமூர்த்தி

தள்ளுபடி... கவனம் தேவை!

ஆடித்தள்ளுபடி பர்ச்சேஸ் எனக்கு மிகப் பெரிய பாடமாக அமைந்தது என்று சொன்னால் மிகையாகாது. 40 சதவிகித தள்ளுபடியில் புதிய சுடிதார் வாங்கினேன். ஆர்வமிகுதியால் பிரித்துப் பார்க்காமல், வீட்டில் வந்து பிரித்து பார்த்தபோது பாட்டம் (பேன்ட்) இல்லை. அதுமட்டுமல்ல... `ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்’ என்பதைப் பார்த்து 1,000 ரூபாய்க்கு 2 புடவை வாங்கினேன். கடையின் லைட் வெளிச்சத்தில் அது கண்ணைக் கவர்ந்தது. வீட்டில் வந்து பிரித்துப் பார்த்தால் டேமேஜ் ஆகியிருந்தது. கையோடு கடைக்குத் திரும்பிப் போய் கேட்டதில், `தள்ளுபடியில் வாங்கியதை மாற்ற முடியாது' எனக் கூறிவிட்டனர். ஆடித்தள்ளுபடி என்ற மயக்கத்தில் இனி கடைக்குப் போவதில்லை என்று முடிவெடுத்துவிட்டேன். இலவசம் என்று எதுவும் இல்லை என்பதையும் நன்கு உணர்ந்தேன்.

- பிரேமா கார்த்திகேயன், கொளத்தூர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்