அன்புள்ள ஆப்கானிஸ்தான்!

ஒரு பயணம் ஓர் அனுபவம் ஒரு வெளிச்சம்மருதன்

‘தயவுசெய்து ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிவிடுங்கள். இங்கே உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்!’ - இந்த வாக்கியங்களை எத்தனைமுறை தன் வாழ்நாளில் நான்சி ஹேட்ச் கேட்டிருப்பார் என்று சொல்வது கடினம். பொம்மையை இறுகப் பிடித்திருக்கும் குழந்தையைப்போல ஆப்கானை அவர் தன்னோடு சேர்த்து நெருக்கமாகக் கட்டியணைத்துக்கொண்டிருந்தார். யாருக்காகவும் எதற்காகவும் அவர் தன் பிடியை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை.

ஒருநாள் மருத்துவர்கள் நான்சியை அழைத்துப் பதமாகப் பேசினார்கள்.  ‘நான்சி, நீங்கள் 90 வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. உங்கள் உடலில் பல பிரச்னைகள் இருக்கின்றன. உங்கள் இதயம், நுரையீரல் இரண்டும் மோசமடைந்துவிட்டன. நீங்கள் அமெரிக்காவுக்குச் செல்வதுதான் உங்கள் உயிருக்கு நல்லது. போதுமான அளவுக்கு உங்கள் வாழ்க்கையை இங்கே கழித்துவிட்டீர்கள். இங்கிருந்து உடனே வெளியேறாவிட்டால் உயிருக்கே ஆபத்து நேரலாம்’ என்றபோதும் `என் உயிர் ஆப்கானிஸ்தானில் பிரிந்துசெல்வதையே நான் விரும்புகிறேன்' என்று திட்ட வட்டமாகச் சொல்லிவிட்டார் நான்சி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!