சேவையால் ஒளிரும் மனுஷி!

நட்சத்திரம்சஹானா

லகின் மிகச்சிறந்த நடிகைகளில் ஆட்ரே ஹெப்பர்னும் ஒருவர். ஆஸ்கர், கிராமி, எம்மி, டோனி விருதுகளை வென்றவர். நடிப்பால் மட்டுமன்றி, எளிய மக்களுக்கு அவர் செய்த சேவை களாலும் உலக மக்கள் மனதில் அழுத்தமாக இடம்பிடித்திருக்கிறார். 

பெல்ஜியத்தில் பிறந்து, நெதர்லாந்தில் வளர்ந்து, ஹாலிவுட்டில் நட்சத்திரமாக ஜொலித்தவர் ஆட்ரே ஹெப்பர்ன். `வரலாற்றிலேயே மிகவும் அழகான பெண்' என்று புகழப்பட்டாலும், அவர் மிகவும் எளிமையானவராகவே வாழ்ந்தார். சினிமா வாய்ப்புகள் குவிந்து கொண்டிருந்த காலகட்டத்தில்கூட, தன் இரு மகன்களை வளர்ப்பதற்காகவே எட்டாண்டுகள் திரைத்துறையிலிருந்து ஒதுங்கியிருந்தார். மீண்டும் நடிக்க வந்த போது திரையுலகம் அவரை இருகரம் நீட்டி ஏற்றுக்கொண்டது.

ஆட்ரே நெதர்லாந்தில் இருந்த காலகட்டத்தில், ஜெர்மன் நாஜிகளால் 22 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். அந்தக் கொடூரத்திலிருந்து தப்பிப்பிழைத்த வர்களில் ஆட்ரேவும் ஒருவர். அதனால், அவருக்கு எளிமையான வாழ்க்கையின் மீதும் எளியவர்களின் மீதும் நேசம் இயல்பாகவே இருந்தது.
1954-ம் ஆண்டில், ஆட்ரே யூனிசெஃப் அமைப்புக்காகப் பணிபுரிந்தார்.

58 வயதில் நடிப்பதை நிறுத்தியவர், மீண்டும் யூனிசெஃப் அமைப்பின் நல்லெண்ணத் தூதுவராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். 1988-ம் ஆண்டில் களப்பணிக்காக எத்தியோப் பியாவுக்குச் சென்றார். போர்களால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த நாடு அது. பெண்களும் குழந்தைகளும் உணவு தேடி நாட்கணக்கில், வாரக்கணக்கில் நடந்துகொண்டிருந்தார்கள். ஓர் ஆதரவற்ற குழந்தைகளின் முகாமுக்குச் சென்ற ஆட்ரே, அந்தக் கொடுமையான சூழலைக் கண்டு நிலைகுலைந்து போனார். மிகச்சிறிய இடத்தில் அளவுக்கு அதிகமான குழந்தைகள், உணவுப் பற்றாக்குறை... பாதுகாப்பான குடிநீர் இல்லாததால் நோய்த்தொற்று வேகமாகப் பரவிக்கொண்டிருந்தது.

“என் இதயமே நொறுங்கிவிட்டது. தாங்கமுடியாத துன்பம் அழுத்துகிறது. இருபது லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பட்டினியால் மடியக் காத்திருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள்” என்று ஆட்ரே வேதனையுடன் கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்