33 வயதில் 30 லட்சம் மக்களைத் திரட்டிய நாயகி!

நட்சத்திரம்விஜயா ஆனந்த்

65 ஆண்டுகளுக்குப் பிறகும் அர்ஜென்டினா மக்களால் மறக்க முடியாத ஒரு நடிகை இவா பெரோன்.

அர்ஜென்டினாவின் சிறிய கிராமத்தில் பிறந்து, தந்தையை இழந்து... துயரமாகவே தொடங்கியது இவாவின் வாழ்க்கை. பள்ளி நாள்களிலேயே நாடகங்களில் நடித்தார். 15 வயதில் வானொலியில் வேலைக்குச் சேர்ந்தார். பிறகு திரைப்பட நடிகையாக மாறினார்.

1944-ம் ஆண்டு பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் அரசியல்வாதியான பெரோனும் இவாவும் கலந்துகொண்டனர். இருவரும் நண்பர்களானார்கள். ஒருமித்த உணர்வு ஏற்பட்ட காரணமாக, 24 வயது மூத்தவ ரான பெரோனுடன் இணைந்து வாழ ஆரம்பித்தார் இவா.

தொழிலாளர்நல அமைச்சராக பெரோன் இருந்ததால், இவாவுக்கும் அரசியலில் ஆர்வம் வந்தது. தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்வதிலும் அவர் ஆர்வம் காட்டினார். தானே முன்னின்று தொழிற்சங்கங்களை ஆரம்பித்தார். பெரோனின் அரசியல்,  தொழிற்சங்கப் பணிகளில் இவாவும்  அதீத ஈடுபாடு காட்டினார். இவர்களின் செயல்பாடுகள் காரணமாகச் செல்வந்தர்கள் மற்றும் ராணுவத்தினரின்  எதிர்ப்பைச் சம்பாதிக்க நேர்ந்தது.  இதன் விளைவாக  பெரோன் கைதுசெய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!