ஹாலிவுட்டின் காதல் கண்மணி!

நட்சத்திரம்சஹானா

துவரை எந்தத் திரைப்படத்திலும் காட்டாத, மிக உன்னதமான காதல் கதை இது.

மெரில் ஸ்ட்ரீப் ஹாலிவுட்டில் இன்றளவும் பேசப்படும் ஓர் ஆளுமை.ஆறே திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இன்றுவரை மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராகக் கொண்டாடப்படுபவர் ஜான் கேஸல். இவர் நடித்த அனைத்துப் படங்களுமே விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு, அவற்றில் மூன்று திரைப்படங்கள் விருதுகளையும் தட்டிச் சென்றுள்ளன. 1976-ம் ஆண்டு ஜானும் மெரிலும் ஒரு திரைப்படத்தில் சேர்ந்து நடித்தனர். ஜானின் எளிமை, நடிப்பு, எளிதில் நட்பு பாராட்டும் குணங்களால் ஈர்க்கப்பட்ட மெரில், விரைவிலேயே அவருக்கு நல்ல தோழியாக மாறினார். நட்பு அடுத்த கட்டத்தை வேகமாக எட்டியது. இருவரும் காதலர்களா னார்கள். `வாழ்நாள் முழுவதும் ஜான் என்ற அற்புதமான மனிதருடன் பயணிக்க வேண்டும்' என்று நினைத்தார் மெரில். `என் வாழ்நாளில் மெரில் போன்ற ஒரு பெண்ணைச் சந்தித்ததில்லை' என்றார் ஜான்.

அன்பும் காதலும் பொங்கி வழிந்த வாழ்க்கையில் ஒருநாள் ஜானுக்கு உடல் நலம் குன்றியது. இருவரும் மருத்துவமனை சென்றனர். பல பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டன. ஜானுக்கு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருப்ப தாகவும், அது உடல் முழுவதும் பரவிவிட்டதாகவும் மருத்துவர் தெரிவித்தார். இதைக் கேட்டு ஜான் அமைதியாக இருந்தார். அதிர்ந்து போனாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சூழலை இயல்பாக்கும் நோக்கில், `இன்று எங்கே இரவு உணவைச் சாப்பிடலாம்' என்று கேட்டார் மெரில்.

புற்றுநோயிலிருந்து ஜானை எப்படியும் மீட்டுவிட முடியும் என்று நம்பிய மெரில், சிறந்த மருத்துவமனையில் சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்தார். ஜானின் உடல்நலம் பற்றிய செய்திகள் வெளியில் பரவின. இருவரும் சேர்ந்து நடித்துக்கொண்டிருந்த The deer hunter படத்திலிருந்து ஜானை நீக்குவதாகத் தயாரிப்பாளர் அறிவித்தார். ஜான் இல்லாவிட்டால் தானும் திரைப் படத்தில் நடிக்கப்போவதில்லை என்றார் மெரில். பிறகு ஜான் சம்பந்தப்பட்ட காட்சிகளை விரைந்து எடுத்துமுடித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!