‘என் தேசம்... என் மக்கள்!' - லட்சியத்துக்காக வசதிகளை உதறிய ஷர்மிளா

முகங்கள்சாஹா - படங்கள் : க.பாலாஜி

மெரிக்காவில் நிரந்தரக் குடியுரிமை, அங்கே உள்ள மிகப்பெரிய மருத்துவமனைகளில் மதிப்புமிக்க பொறுப்புகள், டாலர்களில் சம்பளம்... வசதியான வருங்காலத்துக்கு உத்தரவாதம் தந்த அனைத்தையும் துறந்து `என் தேசம்... என் மக்கள்' என முடிவெடுக்கும் துணிவு ஒரு சிலருக்கே வரும். சென்னையைச் சேர்ந்த டாக்டர் ஷர்மிளாவுக்கு அந்தத் துணிவு வந்திருக்கிறது.

மருத்துவரான ஷர்மிளாவுக்குத் திருமணம், குழந்தைப் பிறப்புக்குப் பிறகு சாமானியப் பெண்கள் சந்திக்கிற சவால்கள் முன்னே நின்றிருக்கின்றன. அவற்றை வெற்றிகொண்டு, மீண்டெழுந்த கதை மகத்தானது. தான் சார்ந்த மருத்துவத் துறையில், மருத்துவர் அல்லாத பிற பிரிவுகளில் ஏழை மாணவர் களைச் சாதனையாளர்களாக உருவாக்கும் அவரது முயற்சி கவனிக்கவைக்கிறது.

சமீபத்தில் ஜெனீவாவில் நடைபெற்ற 70-வது வேர்ல்டு ஹெல்த் அசெம்பிளியில் ‘ஹீரோயின்ஸ் ஆஃப் ஹெல்த்’ விருது வென்று வந்திருக்கிற ஒரே இந்தியப் பெண் இவர். ‘`கல்யாணம், குழந்தைப் பிறப்புக்குப் பிறகு கனவுகளைத் தொலைக்கிற பெண்கள்ல நானும் ஒருத்தியா இருந்திருக்க வேண்டியது. என் மன உறுதிதான் இன்னிக்கு இந்த இடத்துக்குக் கூட்டிட்டு வந்திருக்கு...’’ - ஆழ்ந்த பெருமூச்சுக்குப் பிறகு தொடர்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்