ஆண் குழந்தைகளைப் பெற்ற அம்மாக்களுக்கு!

தங்க மகன்யாழ் ஸ்ரீதேவி - படங்கள் : க.தனசேகரன், சி.சுரேஷ் பாபு, ராஜுமுருகன்

ழக்கவழக்கங்கள் முதல் பருவமடைதல் வரை பெண் குழந்தை களுக்குப் பல விஷயங்களையும் கற்றுக் கொடுக்கும் இந்தச் சமூகம், ஆண் குழந்தைகளுக்கு ‘ஆம்பளப் புள்ள நல்லா சாப்பிடணும்’ என்பதைத் தாண்டி பெரிதாக எந்த அறிவுரையும் வழங்குவ தில்லை. ஆனால், ஆண் குழந்தைகளுக்கு நாம் கற்றுக்கொடுக்கக்கூடிய விஷயங்கள் ஏராளம் உள்ளன. அதற்காகவே இந்தத் தொடர்.

ஆண் குழந்தை வளர்ப்பு பற்றி ஏன் முக்கியத்துவம் கொடுத்துப் பேச வேண்டும்?

கரூரைச் சேர்ந்த குழந்தைகள் நலச் சிறப்பு மருத்துவர் ராதிகா,  “குழந்தை வளர்ப்பில் ஆண் பெண் என இருபாலினக் குழந்தைகளுக்கும் சமமான கவனிப்பு கொடுக்கப்பட வேண்டும். அவர்களின் வளர்ச்சியை பாடி ஹெல்த், மென்ட்டல் ஹெல்த், செக்ஸுவல் ஹெல்த், பிஹேவியரல் ஹெல்த் என்று நான்கு வகைகளாகப் பிரித்து அணுக வேண்டும். இந்த நான்கு அம்சங்களுடன் பெண் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர், அதே அக்கறையோடு ஆண் குழந்தைகளை வளர்ப்பதில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!