கடலோரக் கவிதைகள் - ஜெனிஃபர் டீச்சரைத் தேடி...

நினைவோவியம்சந்தோஷ் நாராயணன் - ஓவியங்கள் : ரமேஷ் ஆச்சார்யா

நாகர்கோவில் கோட்டாறு ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி `ஸ்வச் பாரத்'துக்குச் சவால்விடும் பயணிகள் அறையில் குளித்து உடை மாற்றி வெளியே வந்து டாக்ஸிக்காரரிடம் “முட்டம் போகணும்” என்றேன். வண்டி கிளம்பி, செட்டிகுளம் தாண்டும்போது மலையாளச் சாயலுள்ள டிரைவர் முகத்தைத் திருப்பாமல் கேட்டார்... “முட்டத்தில் எங்கே சார் போகணும்?”

என்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. முட்டத்தின் வரை படத்தைத் தலைக்குள் ஒருமுறை ஓட்டி விட்டுச் சொன்னேன், “சகல புனிதர்கள் தேவாலயம்.”

டிரைவர் இப்போது முகத்தைத் திருப்பி என்னைப் பார்த்தார், “ஆல் செயின்ட்ஸ் சர்ச்சா?”

நான் புன்னகைத்துத் தலையாட்டினேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்