``நானே சிவகாமி நானே வில்லி!'' - மதுபாலா

நேர்காணல்பா.ஜான்ஸன் - படங்கள் : பா.காளிமுத்து

“ஆமா, மின்னல் மாதிரியே ஃப்ளையிங் விசிட்தான். ஏன்னா, சென்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும். இங்க வர்றதுக்குக் கிடைக்கும் எந்த வாய்ப்பையும் தவறவிட மாட்டேன். இப்போதான் என் ஃப்ரெண்டைச் சந்திக்க வந்தேன். சாயங்காலம் மும்பை திரும்பிடுவேன்” என்று சென்னையைப் பற்றி மதுபாலா பேசும்போது அத்தனை உற்சாகம். அந்த மகிழ்ச்சி கொஞ்சமும் குறையாமல் சினிமா, சீரியல், குடும்பம் என ஒவ்வொன்றைப் பற்றியும் பேசத் தொடங்குகிறார்.

சினிமா, மீடியா பரபரப்பையெல்லாம் தாண்டி, வாழ்க்கை எப்படி இருக்கு?

``இந்தக் கேள்விக்குப் பதில் சொன்னதும், ஆன்மிகச் சொற்பொழிவு பண்ற மாதிரி நினைப்பீங்க. நான் இந்த நொடியில் கிடைக்கிற சந்தோஷத்தின்மீது தீவிர நம்பிக்கையுள்ள ஆள். இப்போதான் ‘ஆரம்ப்’ டி.வி சீரியல் பண்ணி முடிச்சேன். அதுக்கு முன்னால ‘சப் டிக் ஹெய்ன்'னு ஒரு குறும்படம் பண்ணேன். அந்தக் குறும்படம் நிறைய போட்டிகள்ல கலந்து கிட்டு, நிறைய பாராட்டுகளையும் வாங்கிக் கொடுத்திருக்கு. இதையெல்லாம் ரொம்ப என்ஜாய் பண்ணிப் பண்ணேன். வேலை செய்யும்போது, எல்லா எண்ணமும் அதுபற்றி மட்டுமே இருக்கும்.வேலை எதுவும் இல்லேன்னா... சென்னை, பார்ட்டிக்குப் போறது, என் பொண்ணுங்களுக்குத் தேவையானதைச் செய்து கொடுக்கறது, யோகா பண்றது... இப்படிப் பல வேலைகள் இருக்கும். போர் அடிக்காத அளவுக்கு நிறைய பொழுதுபோக்கும் உண்டு. திடீர்னு பியானோ கத்துப்பேன், டான்ஸ் கத்துப்பேன். ‘Either you earn or learn’ - இதுதான் என் எண்ணம். மீடியா வேலைகள் இல்லைன்னா, எனக்குனு தனியா ஒரு வாழ்க்கை உண்டு.''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!