காசிமேட்டு வருத்திச்சி பெண்கள்

வாழ்க்கைவெ.நீலகண்டன், ஜி.லட்சுமணன் - படங்கள் : தே.அசோக்குமார்

‘சோ’வென்ற, லயம் மாறாத இசையோடு எம்பி குதித்துக் கரையில் வந்து விழுகிறது கடல்நீர். நீரிலேறி வரும் உப்புப்படிந்த குளிர்காற்று உடலைச் சிலிர்க்கவைக்கிறது. கடற்கரையையொட்டிய சிறிய சிமென்ட் தடுப்பில்  அன்னக்கூடையைத் தொட்டியாக்கி அதற்குள் அமர்ந்தபடி கடல் பார்த்துக்கொண்டிருக்கிற பெண்கள் முகத்தில் சிறு பரவசம்.  இரவைக் கிழித்துக்கொண்டு கடலின் மையத்தில் ஓர் ஒளிப்புள்ளி வெளிப்படுகிறது. கொஞ்சம்கொஞ்சமாகப் பெரிதாகி, படகாக விரிகிறது ஒளி. 

அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் பரபரப்பு பற்றிக்கொள்கிறது. சுடச்சுட ஏலக்காய் டீயை உறிஞ்சி, தூக்கத்தை விரட்டிக்கொண்டு படகுகளுக்காகக்  காத்திருக்கிறார்கள் நூற்றுக்கணக்கான பெண்கள். திருவள்ளூர், செங்கல்பட்டு, சத்தியவேடு, காஞ்சிபுரம் எனச் சென்னையைச் சுற்றி பல பகுதிகளில் மீன் விற்கும் பெண்களுக்குக் காசிமேடுதான் ஆதாரம். நள்ளிரவில் கிளம்பி, முதல் படகு வருவதற்குள் காசிமேட்டுக்கு வந்துவிடுகிறார்கள். பேரம் பேசி, ஏலம் கேட்டு அன்னக்கூடையை நிறைத்துக்கொண்டு கிளம்ப, எட்டு மணிக்கு மேலாகிவிடுகிறது. இந்தப் பெண்களைக் குறிவைத்து, சேலை வணிகத்திலிருந்து புளி வணிகம் வரை பரபரப்பாக நடக்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்