நல்லா...

தெய்வ மனுஷிகள்வெ.நீலகண்டன் - படங்கள் : ஆர்.எம்.முத்துராஜ் ஓவியம் : ஸ்யாம்

ல்லா வசதியான குடும்பத் தைச் சேர்ந்தவ. அவங்க அப்பங்காரன் ராமலிங்கம் பெரிய ஜமீனு. அம்மாக்காரி பேரு இந்துராணி. ஒத்தை அண்ணன். இவ `நல்லா'ன்னா, அவன் `நல்லான்'. ஊருக்காட்டு விவசாயத்துல பெரும்பங்கு, மூட்டை மூட்டையாக வீட்டுக்கு வந்திரும்.  வெள்ளித்தட்டுல வெஞ்சனம் வெச்சு, தங்கத்தட்டுல சாப்பாடு சாப்பிடுற அளவுக்கு வளம்னா வளம். அண்ணங் காரனுக்கு தங்கச்சிமேல அம்புட்டுப் பிரியம். தங்கை கேட்டா வானத்தையே வளைச்சுக் குடுத்திடுவான். வத்திராயிருப்பு பக்கத்துல இருக்கிற அர்ச்சுனாபுரத்துல நாலு தெரு மரிச்ச பெரிய அரண்மனை.

ராஜா வூட்டுப் பொண்ணுங்கிறதால ஊருல தேவதையா திரிவா நல்லா. எல்லாரும் அவங்க வீட்டுப் பிள்ளையாவே அள்ளி,அரவணைச்சுக் கொண்டாடு வாங்க. அம்மாயும், அப்பனும் நல்லா வைத் தெய்வப் பொறப்பாவே பாவிச்சு வளர்த்தாங்க.

நல்லாவுக்கு ஆறு வயசானப்போ அம்மாவும் அப்பாவும் அடுத்தடுத்துச் செத்துப்போனாங்க. கலங்கி நின்ன நல்லாவை, அம்மைக்கு அம்மையா, அப்பனுக்கு அப்பனாயிருந்து பார்த்துக் கிட்டான் நல்லான்.

`மக்க மனுஷங்க நல்லவுகளா? தங்கச்சிய தங்கமா பார்த்துக்குவாங் களா?'ன்னு எல்லாத் தையும் கேட்டு விசாரிச்சு  ஒரு மாப்பிள்ளையைப் புடிச்சான் நல்லான். மானா மதுரை ராஜா, காசிராசன்தான் அந்த மாப்பிள்ளை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!