முழுமையான பலன்கள் தரும் முருங்கைக்காய் சதை!

உணவே மருந்துசிவப்ரியா மாணிக்கவேல், உணவியல் ஆராய்ச்சியாளர்

முருங்கைக்காய் சூப்

செய்முறை: முருங்கைக்காய் வேகவைத்த தண்ணீர் ஒரு கப், பருப்பு வேகவைத்த தண்ணீர் ஒரு கப், 2 டீஸ்பூன் முருங்கை சதைப்பகுதி என மூன்றையும் ஒன்றாகக் கலந்து மசிக்கவும். கடாயில் அரை டீஸ்பூன் நெய் ஊற்றி கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் அரை டீஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். இத்துடன் எடுத்து வைத்திருக்கும் முருங்கைத் தண்ணீர்க் கலவையைக் கலந்து, இத்துடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்கவைத்து இறக்கவும். இறக்கும்முன் மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கினால் சுவையான சூப் ரெடி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!