ராசிபலன்கள்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
நவம்பர் 28-ம் முதல் டிசம்பர் 11-ம் வரை ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

மேஷம்

குடும்பம்:
பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். வர வேண்டிய பணம் வந்து சேரும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். வழக்குகள் சாதகமாகும்.

பிள்ளைகள்: அவர்கள் போக்கிலேயே விட்டுப்பிடிப்பது நல்லது.

வியாபாரம்: போட்டிகளைச் சமாளித்து ஓரளவு லாபம் கிடைக்கும்.

உத்தியோகம்:  பொறுப்புகள் அதிகரிக்கும்.

டிசம்பர் 2-ம் தேதி முதல் கணவன்  மனைவி ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது அவசியம்.


ரிஷபம்

குடும்பம்: புதிய முயற்சிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். பணம் ஓரளவு வரும். பழைய கடன் பிரச்னைகள் ஓரளவுக்கு தீரும். விலை உயர்ந்த மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள்.

பிள்ளைகள்: திருமண வயதில் உள்ள பிள்ளைகளின் திருமண முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடுவீர்கள்.

வியாபாரம்: கமிஷன் மூலம் லாபம் அதிகரிக்கும்.

உத்தியோகம்: சக ஊழியர்களை அனு சரித்துச் செல்வது நல்லது.

கணவன் மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!