சேமிப்பா? முதலீடா?

பெண்Moneyஜெ.சரவணன்

 

சிங்கிள் பேரன்ட்டான நான், தனியார் நிறுவனத்தில் மாதம் முப்பதாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறேன். குழந்தைகளின் படிப்பு மற்றும் வீட்டு வாடகை, போக்குவரத்துச் செலவு, பொழுதுபோக்கு, வீட்டுச் செலவு என மாதம் ரூபாய் 15 முதல் 18 ஆயிரம் வரை செலவாகிறது. மீதமுள்ள பணத்தை முதலீடு செய்வதா, சேமிப்பதா? வருங்காலத்தில் வீடு மற்றும் கார் வாங்கும் விருப்பத்தில் உள்ள எனக்கு வழிகாட்டவும்.

- சாமுண்டீஸ்வரி, பெங்களூரு - 3

பதில் தருகிறார் முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன்...

சேமிப்பு மற்றும் முதலீட்டில் எந்தக் குழப்பமும் தேவையில்லை. உடனடியாகத் தேவைப்படும் என்றால் சேமிப்பில் வைக்கலாம். உடனடியாகத் தேவைப்படாத பணத்தை முதலீடு செய்யலாம்.

சிங்கிள் பேரன்ட் என்பதால், முதலில் நீங்கள் டேர்ம் இன்ஷூரன்ஸ் மற்றும் மெடிக்கல் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்வது அவசியம். அது உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் பாதுகாப்பாக இருக்கும். இதற்கான பிரீமியம் போக மீதமிருக்கும் பணத்தை மியூச்சுவல் ஃபண்டில் விருப்பத்துக்கேற்ப முதலீடு செய்து வரலாம்.

குழந்தைகள் என்று சொல்லியிருக்கிறீர்கள். ஆணா, பெண்ணா என்று சொல்லவில்லை. குழந்தைகளின் எதிர்காலப் படிப்பு, திருமணம் போன்றவற்றுக்கு உங்களுக்குப் பணம் தேவைப்படலாம். அதனால், கார், வீடு போன்றவற்றை வாங்குவதில் அவசரம் காட்ட வேண்டாம். ரியல் எஸ்டேட்டில் விலை குறைவதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளன. எனவே, நல்ல பேலன்ஸ்டு ஃபண்டுகளில் முதலீடு செய்து வந்தால், பிறகு நல்ல விலையில் வீடு வாங்க முடியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்