கடையை விரிவுபடுத்துவது எப்படி?

தொழில் முன்னேற்றம்வே.கிருஷ்ணவேணி

இரண்டு தையல் மெஷின்களை வைத்து வீட்டிலேயே துணிகள் தைத்துத் தருகிறேன். ஆர்டர்கள் அதிகரிப்பதால் இன்னும் இரண்டு மெஷின்கள் வாங்கி, வேலைக்கு ஆளும் எடுத்து, கடையாக ஆரம்பிக்கலாமா?

- அமுதா முத்துகிருஷ்ணன், மதுரை

பதில் தருகிறார் ஹேமாஸ் பொட்டீக் அண்டு ஃபேஷன் ஸ்கூல் லட்சுமிபிரபா...

‘`அமுதா, உங்களுக்குத் தன்னம்பிக்கை தரும் ஒரு தகவலைச் சொல்லட்டுமா... உங்களைப்போலவே நானும் ஆரம்பத்தில் வீட்டிலேயே தைத்துக்கொடுத்துதான் என் வெற்றிப் பயணத்தை ஆரம்பித்தேன்.

முதலில் உங்களுடன் ஒரு பணியாளரை மட்டும் நியமித்து, இதே மெஷின்களைப் பயன்படுத்தி வருமானத்தைச் சேமியுங்கள். அந்தத் தொகையைக் கொண்டு தேவைக்கேற்ப மெஷின்களை வாங்குவது நல்லது.

குறிப்பாக எம்ப்ராய்டரி மெஷின், ஆரி எம்ப்ராய்டரி மெஷின் போன்ற கமர்ஷியல் மெஷின்களை வாங்கிக் கடையில் போடுவதற்காகத் தனியாகப் பணத்தைச் சேமிக்கலாம்.

ஓரிரு பிரைடல் பிளவுஸ் வருமானத்தை வைத்தே ஒரு பணியாளருக்கு மாதச் சம்பளம் கொடுத்துவிடலாம். இவை தவிர, ஸ்கூல் யூனிஃபார்ம், நைட்டி, உள்பாவாடை ஆர்டர்களை வாங்கலாம். தையல் தொழிலைப் பொறுத்தவரை வருமானம் ஈட்ட இப்படிப் பல வழிகள் இருக்கின்றன. சுயஉதவிக் குழுக்கள் மூலமாக வங்கி களில் கடன் பெறவும் வாய்ப்பிருக்கிறது.

ஒரு முக்கியமான விஷயம்... எப்போதும் அகலக்கால் வைக்காதீர்கள். பொறுமையாக ஒவ்வொரு படியாக எடுத்து வையுங்கள்!”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!