தீபக்கோலத் திருவிழா

தீபக்கோலங்களின் சிறப்புகள்

கோலங்களில் நவகிரகக் கோலம், மகாலட்சுமி கோலம், ஸ்ரீசக்கரக் கோலம் என்று பல தெய்விகக் கோலங்கள் உள்ளன. ஸ்ரீசக்கரக் கோலம் மிகவும் விசேஷமான கோலமாகும். ஸ்ரீசக்கரத்தை அழகாக வரைந்து, சுற்றிலும் தீபங்களை ஏற்றிவைப்பதுடன், கோலத்தின் மையப்புள்ளியான பிந்து ஸ்தானத்தில் ஒரு தீபம் ஏற்றிவைப்பது சிறந்த அம்பிகை வழிபாடாகவும் அமை கிறது. ஸ்ரீசக்கரத்தைச் சுற்றிலும் உள்ள தீபங்கள் அம்பிகையின் பரிவார தேவதைகளாகவும், பிந்து ஸ்தானத்தில் உள்ள தீபம் அம்பிகையாகவும் பாவித்து வழிபடலாம். இதனால், அம்பிகையின் பூரண அருள் நமக்குக் கிடைக்கும்.

தீபங்களின் வகைகள்

விளக்குகளில் மண்ணால் ஆன அகல் விளக்கு, குத்து விளக்கு, தூண் விளக்கு, அன்ன விளக்கு, பாவை (பதுமை) விளக்கு, தூண்டா விளக்கு, அஷ்டலட்சுமி விளக்கு, கிளிக்கொத்து விளக்கு, பீங்கான் விளக்கு, மா விளக்கு எனப் பலவகை விளக்குகள் உள்ளன. பூஜை அறையில் காமாட்சி விளக்கும், இரண்டு பக்கமும் குத்து விளக்குகளும், முகப்பில் கோதை விளக்கும், கோலத் தின் நடுவே பதுமை விளக்கும், வாசற் படியிலும் கோலத்தைச் சுற்றிலும் அகல் விளக்குகளும் ஏற்றிவைப்பார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick