ஒரு கிழிந்த புத்தகத்தின் கதை! - டோரிஸ் லெஸ்ஸிங்

ஒரு பயணம் ஓர் அனுபவம் ஒரு வெளிச்சம் மருதன்

றும்புக் கூட்டத்தைப் போல நீண்டிருந்த அந்த வரிசையில் ஒரு பெண் மட்டும் தனித்துத் தெரிந்தார். இரண்டு குழந்தைகள் அந்தப் பெண்ணின் காலைக் கட்டிப்பிடித்துக்கொண்டிருந்தார்கள். இன்னொரு குழந்தையை அவர் வயிற்றில் சுமந்துகொண்டிருந்தார். மற்ற ஆப்பிரிக்கப் பெண்களைப் போலதான் இருந்தார் என்றாலும், அவர்கள் அனைவரிடமிருந்தும் அவர் மாறுபட்டிருந்தார். அவர் யாருடனும் கதை பேசிக் கொண்டிருக்கவில்லை. எப்போது என் முறை வரும் என்று தொலைவிலிருந்த தண்ணீர்த் தொட்டியை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டு நிற்கவும் இல்லை. அவ்வளவு ஏன், `மா' என்று பிடித்து இழுத்துக்கொண்டிருக்கும் குழந்தைகளைக்கூட அவர் கவனித்ததாகத் தெரியவில்லை.

தலையைக் குனிந்து தன் கையிலிருந்த புத்தகத்தை அவர் வாசித்துக்கொண்டிருந்தார். ஜிம்பாப்வேயில் இருந்த அந்தக் குக்கிராமத்துக்கு நிச்சயம் இது ஓர் அபூர்வமான காட்சிதான். அதைவிட ஆச்சர்யம் அவர் படித்துக்கொண்டிருந்தது ஏதோ ஒரு புத்தகமல்ல, லியோ டால்ஸ்டாய் எழுதிய `அன்னா கரீனினா'. ஆச்சர்யம் இத்துடன் முடிவடையவில்லை. அவரிடம் இருந்தது, அந்தப் பெரிய நாவலில் இருந்து கிழிக்கப்பட்ட ஒரு சிறிய பகுதி மட்டும்தான். அதைத்தான் அவர் ஓயாமல் திரும்பத் திரும்பப் படித்துக்கொண்டிருந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick