சட்டம் பெண் கையில்!

வழிகாட்டிஎழுத்து வடிவம்: யாழ் ஸ்ரீதேவி

பொதுவாக அனைத்துச் சட்டப் பிரிவுகளும் பெண்ணுக்குப் பக்கபலமாகவே நிற்கின்றன. ஆனால், அதுபற்றிய விழிப்பு உணர்வு கிடைக்கப்பெற்று அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. அந்த இடைவெளியைக்களையும் ஒரு முயற்சியே ‘சட்டம் பெண் கையில்’ பகுதி. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் வைதேகி பாலாஜி, இந்தத் தொடரைத் தரவிருக்கிறார்.

``பெண்களின் தோள்பற்றி உதவ, கரம் கொடுத்து அன்பை உறுதிசெய்ய, கண்களில் துளிர்க்கும் நீரைத்துடைத்து ஆறுதல் சொல்ல, நெஞ்சில் வடியும் செந்நீரை நம்பிக்கை அருவியாக மாற்றிப்போட... சக மனிதர்களோடு சட்டமும் காத்திருக்கிறது. ‘இந்த உலகமே என்னை வஞ்சித்துவிட்டது’ என்று நிராதரவாக உணரும் பெண்களுக்கு உதவ கையில் தராசு ஏந்தி, கண்களில் கறுப்புத் துணி கட்டியபடி காத்திருக்கிறாள் நீதி தேவதை. அவள் தரும் பாதுகாப்புக் கவசத்தைப் பெண்ணுலகிடம் சேர்ப்பதற்கான அக்கறையின் வடிவமே `சட்டம் பெண் கையில்!' பகுதி. 

இணைய பாலியல் குற்றங் கள் முதல் குடும்ப வன்முறை வரை... பெண்ணுக்கான சொத்துரிமை முதல் சிங்கிள் பேரன்ட் சிக்கல்கள் வரை... விவாகரத்து முதல் ஜீவனாம் சம் வரை... இன்னும் பெண் உலகின் பிரச்னைகளைத் தீர்க்கும், அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்து கொடுக்கும் சட்டப்பிரிவுகள்  உள்பட அனைத்தையும் பேசுவோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick