சனிப்பெயர்ச்சி பலன்கள் | Astrological predictions - Aval Vikatan | அவள் விகடன்

சனிப்பெயர்ச்சி பலன்கள்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
19.12.2017 தேதி முதல் 26.12.2020 தேதி வரைஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

நிகழும் ஹேவிளம்பி வருடம் மார்கழி மாதம் 4-ம் தேதி செவ்வாய்க்கிழமை (19.12.2017) பிரதமை திதி, மூலம் நட்சத்திரத்தில் காலை 9.30 மணிக்கு விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குள் சனி பகவான் நுழைகிறார். 19.12.2017 முதல் 26.12.2020 வரை இங்கு அமர்ந்து பலன் தரப்போகிறார்.

வாழ்வை உயர்த்தும்!

எங்கும் எதையும் உடனே செய்து முடிக்க வேண்டும் என்று நினைப்பவர்களே! குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். உங்களது வார்த்தைக்கு மதிப்புக்கூடும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்றுசேருவீர்கள். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். எடுத்த காரியம் யாவற்றிலும் வெற்றி பெறுவீர்கள். புதிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்கள் அமைவார்கள். வராமலிருந்த பாக்கித் தொகைகள் உடனடியாக வசூலாகும். புகழ்பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிக ஊதியம் கிடைத்து, நிலையான வேலையில் அமருவீர்கள். பதவி, சம்பள உயர்வெல்லாம் இனி எதிர்பார்த்தபடி கிடைக்கும். இந்த சனி மாற்றம், உங்களை வாழ்வின் உயரத்துக்கு அழைத்துச் செல்லும்.

பரிகாரம்:
சென்னை, மயிலாப்பூரில்  இருக்கும் ஸ்ரீமாதவப் பெருமாளை சனிக்கிழமையில் சென்று வணங்குங்கள்.


ஆதாயத்தைத் தரும்!

‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என எல்லோரும் எல்லாமும் பெற வேண்டுமென நினைப்பவர்களே! வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து இனி பேச வேண்டாம். குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்துப்போவது நல்லது. முக்கிய பத்திரங்களில் கையெழுத்திடும்போது சட்ட ஆலோசகரைக் கலந்து முடிவெடுப்பது நல்லது. எதிர்பார்த்த பணம் வரும். பிள்ளைகளை அளவுடன் கண்டியுங்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளித்து லாபம் பெறுவீர்கள். பெரிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் சம்பளம் உயரும். சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள். இந்த சனி மாற்றம், உங்களுக்கு அனுபவ அறிவையும் ஆதாயத்தையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: கோயம்புத்தூர் மாவட்டம், சுந்தராபுரம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீவாலீஸ்வரரை பிரதோஷ நாளில் சென்று வணங்குங்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick