டாப் 10 பெண்கள் - தமிழகம்

பிசினஸ் புலி

பிசினஸ் குடும்பத்தைப் பின்னணியாகக் கொண்டவர்தான்  மல்லிகா சீனிவாசன். இப்போது இவரது தலைமையிலான டாஃபே நிறுவனத்தின் வளர்ச்சி பிரமிப்பு அளிக்கிறது. 1985-ல் இந்நிறுவனத்தின் விற்பனை வரவு 86 கோடி ரூபாய். இவர் தலைமை ஏற்ற பிறகு, அதுவே பத்தாயிரம் கோடி ரூபாயைத் தாண்டியிருக்கிறது.  ஆண்டுதோறும் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான டிராக்டர்கள் தயாரிக்கப்படுகின்றன. பொதுவாக இத்தொழில் வீழ்ச்சியில் இருக்கும்போதும், இவரது நிறுவனம் மட்டும் லாபம் ஈட்டி வருவது மல்லிகாவின் நிர்வாகத் திறனுக்கு ஓர் உதாரணம்.

‘நீங்கள் கட்டுப்பாட்டுக்குள் சிக்கிக்கொள்ள வேண்டாம். வாய்ப்புகளைத் தேடுங்கள். ஆனால், அந்த வாய்ப்புகள் உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியவையாக இருக்க வேண்டும்’ என்று இளம்பெண்களுக்கு ஆலோசனை சொல்கிறார் பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கும் மல்லிகா சீனிவாசன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்