வீட்டிலேயே செய்யலாம் வெற்றிகரமான தொழில்கள் - ரூம் ஸ்பிரே - 500 ரூபாய் முதலீட்டில் அசத்தல் லாபம்! | Home Made Room Spray business by Chennai Woman Kalaiselvi - Aval Vikatan | அவள் விகடன்
தன்னைக் கண்டெடுத்தவளின் கதை!

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/10/2017)

வீட்டிலேயே செய்யலாம் வெற்றிகரமான தொழில்கள் - ரூம் ஸ்பிரே - 500 ரூபாய் முதலீட்டில் அசத்தல் லாபம்!

சாஹா, படங்கள்: தே.அசோக்குமார்

வாசனை சூழ வாழ யாருக்குத்தான் பிடிக்காது? நல்ல நறுமணம்... உறைவிடத்தை மட்டுமன்றி, உள்ளத்தையும் ரம்மியமாக மாற்றும். ஊதுவத்தியோ, சாம்பிராணியோ சில நிமிடங்கள் மட்டுமே நறுமணம் பரப்பும். தரையைச் சுத்தம் செய்கிற திரவங்கள் கூடுதலாகச் சில நிமிடங்கள் மணம் வீசலாம். பல மணி நேர நறுமணச் சூழலுக்கு ரூம் ஸ்பிரேக்கள்தான் தீர்வு. அதிலும் ஏசி அறைகளிலேயே பெரும்பாலான நேரத்தைக் கழிக்கிறவர்களுக்கு இருப்பிடத்தைச் செயற்கையாக நறுமணமூட்டுவதைத் தவிர வேறு வழியில்லை.

ஆபத்தில்லாத கெமிக்கல்களைக்கொண்டு, வீட்டிலேயே விதம் விதமான நறுமணங்களில் ரூம் ஸ்பிரே தயாரிக்கக் கற்றுத்தருகிறார் சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த கலைச்செல்வி.

‘`பதினஞ்சு வருஷங்களுக்கு மேல் பினாயில், லிக்விட் சோப், ஹேண்ட் வாஷ், ஃப்ளோர் கிளீனர் தயாரிக்கிற பிசினஸைப் பண்ணிக்கிட்டிருக்கேன். அதுல ஒரு பிரிவுதான் ரூம் ஸ்பிரே தயாரிப்பு. பினாயிலும் ஃப்ளோர் கிளீனரும் ஆர்டர் கொடுக்கிற பலரும் ரூம் ஸ்பிரேயும் சேர்த்துக் கொடுத்தா நல்லாருக்கும்னு கேட்டாங்க.

நீங்க எப்படி பீல் பண்றீங்க