“கதைகள் என்னைக் கைபிடித்து 24 நாடுகளுக்கு அழைத்துச் சென்றன!” - கதைசொல்லி ஜீவா ரகுநாத் | Storyteller Jeeva Raghunath interview - Aval Vikatan | அவள் விகடன்

“கதைகள் என்னைக் கைபிடித்து 24 நாடுகளுக்கு அழைத்துச் சென்றன!” - கதைசொல்லி ஜீவா ரகுநாத்

வெற்றிப் பயணம் வி.எஸ்.சரவணன், படம்: மீ.நிவேதன்

“எல்லோரையும்போலத்தான் என் பால்ய பருவமும் கதைக்கேட்டுக் கழிந்தது. ஆனால், அந்தக் கதைகளெல்லாம் என் வாழ்வில் மிகப் பெரிய மேஜிக் செய்யும் என்பது எனக்கு அப்போது தெரியாது” - புன்னகைத் ததும்ப கூறுகிறார் ஜீவா ரகுநாத். குழந்தைகளுக்கான `கதைசொல்லி’களில் முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் இருப்பவர். தனிப்பட்ட ஆர்வத்தினால் ஆரம்பித்த கதை சொல்லல், தன் வாழ்க்கைக்கான தன்னம்பிக்கையையும் பொருளாதாரப் பலத்தையும் அளித்ததைப் பற்றி நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.

“நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது, வேலை பார்த்தது எல்லாமே சென்னைதான். என் அப்பா டி.ஆர்.ரகுநாத் சினிமாவில் பிரபலமாக இருந்தவர். ‘கண்ணகி’ படத்தில் மாதவியாக நடித்தவர் என் அம்மா
எம்.எஸ்.சரோஜா. இந்தக் கலை பின்னணி இருந்ததால், ஒரு கதையைக் கேட்பவர்களுக்குப் போரடிக்காமல் சொல்வது இயல்பாக எனக்குக் கைவந்தது என நினைக்கிறேன். ஸ்கூலில் படிக்கும்போதே நான் சொல்லும் கதைகளைக் கேட்க ஒரு கூட்டம் இருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick