வாழ்வை மாற்றிய புத்தகம் - இந்த உலகத்தின் மிகப்பெரிய சக்தி எது? - சின்னத்திரை பிரபலம் அர்ச்சனா | The book that changed my life - Archana - - Aval Vikatan | அவள் விகடன்

வாழ்வை மாற்றிய புத்தகம் - இந்த உலகத்தின் மிகப்பெரிய சக்தி எது? - சின்னத்திரை பிரபலம் அர்ச்சனா

சாஹா, படம்: க.பாலாஜி

``நிறைய வாசிக்கிற பழக்கம் உள்ளவள் நான். இன்ஸ்பிரேஷனல் புத்தகங்களைத் தேடிப் படிப்பேன். பெரும்பாலும் பயணங்களின்போதுதான் நிறைய வாசிப்பேன். பல மணி நேரப் பயணத்தில் வாசிப்புதான் எனக்கு கம்பானியன்.

தாலிபான் தீவிரவாதிகளால் துப்பாக்கிச்சூட்டுக்கு உள்ளான 15 வயது பாகிஸ்தான் பெண் மலாலாவின் சுயசரிதை இது.  மலாலாவின் பேச்சு ஒன்றை யூடியூபில் பார்த்தேன். ஒருமுறை சிங்கப்பூர் பயணத்தின்போது ‘ஐ'ம் மலாலா’ புத்தகம் கண்ணில்பட்டு வாங்கிப் படித்தேன்.

உலக பயங்கரவாதச் சூழலிலிருந்து வந்த பெண், கல்விக்குக் குரல் கொடுத்ததைப் பற்றிப் பேசியிருக்கும் இந்தப் புத்தகம் முதன்முறை படித்தபோதே என்னை மனம் கனக்க வைத்தது. இந்தப் புத்தகத்தை இதுவரை மூன்று முறை படித்திருக்கிறேன். ஒவ்வொரு முறை படிக்கிறபோதும் அதே உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் உணர்கிறேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick