“என் பொண்ணோட புன்னகை எல்லோருக்கும் நம்பிக்கையைக் கொடுக்கணும்” - இது கேன்சரை வென்ற மன உறுதி! | Actress Kashturi Shares her Daughter's Fight Against Cancer - Aval Vikatan | அவள் விகடன்

“என் பொண்ணோட புன்னகை எல்லோருக்கும் நம்பிக்கையைக் கொடுக்கணும்” - இது கேன்சரை வென்ற மன உறுதி!

நம்மால் முடியும் வே.கிருஷ்ணவேணி, படங்கள்: ஜெரோம்.கே

‘`வணக்கம், வாங்க!” - புன்னகையுடன் கூடிய வரவேற்பிலேயே தன் எளிமையான இயல்பைச் சொல்கிறார் நடிகை கஸ்தூரி. திரைத்துறை, சின்னத்திரை தவிர, நிகழ்ச்சித் தொகுப்பாளர், சமூக ஆர்வலர் மற்றும் விமர்சகர், சமூக வலைதளப் பங்கேற்பாளர் எனத் தமிழ் மக்களுடன் தொடர்பிலேயே இருக்கிறார் கஸ்தூரி. இந்த அடையாளங்களையெல்லாம்விட, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தன் மகளை அதிலிருந்து மீட்டுக்கொண்டுவந்திருக்கும் ஓர் அம்மாவாக அவரின் போராட்டங்களைப் பற்றி அறிய வருகிறபோது, நம் மனதில் இன்னும் நெருக்கமாக, உருக்கமாகப் பதிந்துவிடுகிறார். அமெரிக்காவில் வசிப்பவர் சமீபத்தில் விடுமுறைக்காக சென்னை வந்திருந்தபோது நிகழ்ந்த நம் சந்திப்பில், வாழ்க்கை பற்றிய சிந்தனைகளைத் தூண்டுகிறார் கஸ்தூரி...

``டாக்டரான என் கணவரின் வேலை காரணமாகக் கல்யாணத்துக்கு அப்புறம் அமெரிக்காவில் செட்டில் ஆகிட்டேன். 2013-ம் வருஷம்... காலையில் நான் கண்விழிக்கும்போது என் இடதுதோளில் மகளும், வலதுதோளில் மகனும் தூங்கிட்டிருக்கிற தாய்மையின் பூரிப்பில் இருந்த காலம். அப்போ என் மகளுக்கு ஆறு வயசு, மகன் கைக்குழந்தை (குழந்தைகளின் பெயர்களைக் குறிப்பிட வேண்டாமென்று தவிர்க்கிறார்). என் அப்பா, அம்மாவோட இழப்பு, கையில் பெருசா பணம் இல்லாத நிலைனு, இதையெல்லாம் மீறி இந்த வாழ்வின் சந்தோஷங்களை என் குழந்தைகள் எனக்குத் தந்துட்டு இருந்தாங்க.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick