“அம்மாவுக்கும் மனைவிக்கும் தோசை சுட்டுக்கொடுக்கிறேன்” - ‘மகளிர் மட்டும்’ இயக்குநர் பிரம்மா | Magalir Mattum Director Bramma talks about his family - Aval Vikatan | அவள் விகடன்

“அம்மாவுக்கும் மனைவிக்கும் தோசை சுட்டுக்கொடுக்கிறேன்” - ‘மகளிர் மட்டும்’ இயக்குநர் பிரம்மா

நேற்று இல்லாத மாற்றம்கு.ஆனந்தராஜ், படங்கள்: ரா.வருண் பிரசாத்

“  ‘சினிமாக் குடும்பம்’ என்ற பிம்பம் எங்க வீட்டுல யார்கிட்டயும் இருக்காது. அதனால, இது ஸ்டார் வேல்யூ பேட்டியா இருக்குமானு தெரியலை’’ என எளிமையாகவும் யதார்த்தமாகவும் ஆரம்பிக்கிறார் ஐஸ்வர்யா. பெண்களின் உலகத்தைத் திரையில் பேசிய ‘குற்றம் கடிதல்’, ‘மகளிர் மட்டும்’ திரைப்படங்களின் இயக்குநரான பிரம்மாவின் மனைவி. ஓர் இனிய மாலைப்பொழுதில் பிரம்மா குடும்பத்தினருடன் உரையாடிய மகிழ்ச்சித் தருணத்திலிருந்து...

‘`பள்ளிப் பருவத்திலிருந்தே சினிமா ஆர்வம் உண்டு. எம்.பி.ஏ முடிச்சுட்டு, கார்ப்பரேட் கம்பெனிகள், என்.ஜி.ஓ நிறுவனங்கள், சொந்த நிறுவனம், அரசு வேலைன்னு ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பணியில் இருந்தேன். இடையிடையே நிறைய நாடகங்கள் இயக்கினதைத்தொடர்ந்து, நண்பர் உதய பிரகாஷுடன் சேர்ந்து ‘ப்ரொசீனியம்’ (Proscenium) என்ற டிராமா கம்பெனியை ஆரம்பிச்சு மேடை மற்றும் வீதி நாடகங்களை நடத்த ஆரம்பிச்சேன். அதன்மூலமா விழிப்பு உணர்வு கருத்துகளை மக்கள்கிட்ட கொண்டுபோய்ச் சேர்க்க முடிஞ்சது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick