ராசிபலன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
அக்டோபர் 31-ம் தேதி நவம்பர் 13-ம் தேதி வரை ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

எதிர்பார்த்த பணம் வரும்!

மேஷம்: சுற்றி வளைக்காமல் எடுத்த எடுப்பிலேயே தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துபவர்களே!  எதிலும் உங்கள் கை ஓங்கும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள். சிலர் வீடு மாறுவீர்கள். சகோதரிக்கு நல்ல வரன் அமையும். அழகு, இளமைக் கூடும். சோர்வு நீங்கி, துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். வேலை தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் வரும். வெற்றி பெறும் வேளையிது.


பிரார்த்தனைகள் நிறைவேறும்!

ரிஷபம்: மற்றவர்களின் குற்றம் குறைகளை அவர்கள் முகத்துக்கு முன்பாகவே சுட்டிக்காட்டும் நீங்கள், உங்களைச் சுற்றி இருப்பவர்களை வழிநடத்திச் செல்வதில் வல்லவர்கள். தடைகளும் ஏமாற்றங்களும் இருந்தாலும் ஓய மாட்டீர்கள். உறவினர்கள், நண்பர்களால் உதவிகள் உண்டு. பிரபலங்களின் நட்பு கிடைக்கும். பூர்வீகச் சொத்து பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். பிரார்த்தனைகள் நிறைவேறும். பண வரவு சுமாராகவே இருக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. வியாபாரத்தில் புதிய முயற்சிகள் வேண்டாம். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். காத்திருந்து காய் நகர்த்த வேண்டிய காலமிது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick