“நிச்சயம் ஒருநாள் நீங்க என்னைப் பார்ப்பீங்க!” | Inspiring Story of a Physically challenged Usha Rani - Aval Vikatan | அவள் விகடன்

“நிச்சயம் ஒருநாள் நீங்க என்னைப் பார்ப்பீங்க!”

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி கு.ஆனந்தராஜ் - படங்கள்: க.தனசேகரன்

“மாற்றுத்திறனாளிகள் என்பதாலேயே முடங்கியே இருக்கணும்னு நாங்க நினைக்கலை. எவ்வளவு தூரம் பயணிக்க முடியுமோ, அதை நோக்கிப் போயிட்டிருக்கோம்” எனப் பூரிப்புடன் உஷா ராணி சொல்ல, ஆமோதித்துத் தலையசைக்கிறார் அவர் கணவர் வெங்கட்ராமன். உஷா ராணி, போலியோவால் பாதிக்கப்பட்டவர். வெங்கட்ராமன், பார்வைத்திறனை இழந்தவர். அன்பின் புள்ளியில் இணைந்து, வாழ்வில் வெற்றிப்படிகளைக் கடந்துகொண்டிருக்கிறார்கள் சேலத்தில் வசிக்கும் இந்தத் தம்பதியர்.

வெங்கட்ராமன் பிறந்து, வளர்ந்தது சேலம். ``பி.எஸ்ஸி முடிச்சுட்டு, போட்டோஷாப் வேலை பார்த்திட்டிருந்தேன். 2004-ம் வருஷம் ஏற்பட்ட கடுமையான காய்ச்சலால், என் பார்வை முழுமையா பறிபோயிடுச்சு. திடீர்னு என் உலகமே இருட்டாகிப்போனதை ஆரம்பத்தில் என்னால் ஏத்துக்கவே முடியலை. பெற்றோர் என்னைவிட்டுக் கொஞ்சம் எழுந்துபோயிட்டாகூட பயம், அழுகைனு ஆகிடுவேன். என் நிலை, என்னைவிட என் பெற்றோருக்கு அதிக வலியைக் கொடுத்தது. எனக்கு ஒரு கண்ணிலாவது பார்வை கிடைக்க, அவங்க கண்தானம் கொடுக்க முன்வந்து மருத்துவர்கள்கிட்ட கேட்டாங்க.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick