``துயரமே எனக்குத் தூண்டுகோல்!’’ - பைக் ரைடிங் சாதனையாளர் சைபி

நம்பிக்கைப் பெண்யாழ் ஸ்ரீதேவி - படங்கள்: க.விக்னேஸ்வரன்

சைபி... சாதனைகள் பல செய்திருக்கும் ஸ்டாண்டிங் பைக் ரைடர். டெய்லரிங் கடை, அவினாசி அத்திக்கடவு திட்டத் தன்னார்வலர் என இவருக்கு வேறு முகங்களும் உண்டு. கல்லூரி மாணவரான மகன் ரித்தின், ப்ளஸ் ஒன் படிக்கும் மகள் ரோஸ்மேரி ஆகியோருக்கு இவர் சிங்கிள் பேரன்ட்.  தன்னைச் சூழ்ந்த பிரச்னைகளை உதறி, நிமிர்ந்தெழுந்த கதையைச் சொல்கிறார் சைபி.

``நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் இருக்கிற மண்வயல் கிராமத்துல ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தேன். அப்பா மேத்யூ, அன்பின் உருவம். அம்மா மேரி தன்னம்பிக்கை மனுஷி. எனக்கு ரெண்டு தம்பிகள், ஒரு தங்கை. வளர்ப்பில் எந்தப் பாலினப் பாரபட்சமும் காட்டாமல் எல்லோரையும் தைரியமா வளர்த்தாங்க. லீவு நாள்கள்ல மலைப்பகுதியில் இருக்கும் விவசாய நிலத்துக்குப் போயிட்டு வர்றதுக்காக, அப்பா எனக்கு ஒரு சைக்கிள் வாங்கிக்கொடுத்தார். அந்த மலையில சும்மா சல்லு சல்லுனு சைக்கிள்ல பறப்பேன். விமானத்துல போற மாதிரி இருக்கும்’’ என்கிற சைபி, பத்தாம் வகுப்புவரை படித்திருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick