காற்றிலிருந்து குடிநீர்! - மூக்கில் விரல்வைக்கச் செய்யும் மும்பைப் பெண்

அசத்தல் ஸ்ரீஅகத்திய ஸ்ரீதர்

‘`இந்தக் கருவி, காற்றிலிருந்து குடிநீர் தயாரிக்கும் என்று அந்த இயந்திரத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தி விளக்கியபோது, அனைவரும் ஆச்சர்யமாகப் பார்த்தனர்’’ என்று உற்சாகமாகத் தொடங்குகிறார் மும்பைப் பெண் மெஹர் பண்டாரா. ‘அவள் விகடன்’ சார்பாக அவருக்கு வாழ்த்துகள் சொன்னோம்.

``2004-ம் ஆண்டு அமெரிக்க விஞ்ஞானி ஒருவர்மூலம் இந்தத் தொழில்நுட்பத்தை அறிந்துகொண்டேன். இதை இந்தியாவில் வெற்றிகரமாகச் செயல்படுத்தும் முயற்சியில் www.watermakerindia.com என்ற வலைதளம் மற்றும் நிறுவனத்தை நிறுவினேன். நாங்கள் தயாரித்த இயந்திரத்தை டெல்லியில் நடந்த தொழில்நுட்பக் கண்காட்சியில் விளக்கியபோது, சாதனத்தைச் சுற்றிவந்து, கண்ணுக்குத் தெரியாமல் எங்கிருந்தாவது தண்ணீர்க் குழாய்கள் செருகப்பட்டுள்ளனவா என சந்தேகத்துடன் பார்வையாளர்கள் பரிசோதித்தனர்’’ என்று சிரிப்பவர், அதன் தொழில்நுட்பத்தையும் விளக்கினார்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick